மாநிலங்களவை தேர்தல்: வைகோவின் வேட்புமனு ஏற்பு!

 

மாநிலங்களவை தேர்தல்: வைகோவின் வேட்புமனு ஏற்பு!

மாநிலங்களவைத் தேர்தலுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது. 

மாநிலங்களவைத் தேர்தலுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது. 

கடந்த  2009ஆம் ஆண்டு நான் குற்றம்சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியிட்டு விழா சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கருத்துக்களைப் பேசியதாக அவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

vaiko

இந்த வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திமுக சார்பில் வழங்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில் வைகோ மாநிலங்களவைக்கான வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு ஏற்கப்படுமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில் வைகோ தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது.

vaiko

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, நான் போட்டியிடுவதால் மதிமுகவில் யாரும் அதிருப்தியில் இல்லை. இன்னும் சொல்லப்போனால், பதவியிலிருந்தவர்கள் தான் மதிமுகவிலிருந்து சென்றனர்.  ஏற்கனவே மத்திய அமைச்சர் பதவிக்கான வாய்ப்பு எனக்கு இருமுறை கிடைத்தது. ஆனால்  அதை நான் ஏற்க  மறுத்தேன். என் குடும்பத்திலிருந்து யாரும் பதவிக்கு வரமாட்டார்கள். மதிமுக தொண்டர்களுக்காகவே நான் வாழ்கிறேன்’ என்று தெரிவித்தார்.