மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை மசோதா! 

மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை மசோதா! 

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா நிறைவேற்றப்பட்டது. 

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா நிறைவேற்றப்பட்டது. 

மக்களவையில் சுமார் 9 மணி நேர வாக்குவாதத்திற்குப் பிறகு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போது இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர்  ஓவைசி அதன் நகலை மக்களவையிலேயே கிழித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார். குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க அங்கு 5000 ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

cab

இந்நிலையில் மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றியது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் மசோதா சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.