மாநாடு போனா என்ன… இதோ சிம்புவின் அடுத்த படம் இது தான்! 

 

மாநாடு போனா என்ன… இதோ சிம்புவின் அடுத்த படம் இது தான்! 

சிம்புவின் அடுத்த படத்தை அவரே இயக்கி, நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: சிம்புவின் அடுத்த படத்தை அவரே இயக்கி, நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். அதற்காக வெளிநாடு சென்று கடும் பயற்சியெடுத்து தனது உடல் எடையைப் பாதியாக குறைத்துக் கொண்டு வந்தார். வந்த கையேடு மாநாடு படத்தில் நடிக்காமல் மஃபிடி படத்தில் நடிக்க சென்று விட்டதால் மாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்க தாமதமானது. அதனால் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்பு இந்த படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகச் சமீபத்தில் அறிவித்தார். 

முழுக்க முழுக்க சிம்புவின் அரசியல் ட்ரீட்டாக கத்துத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த செய்தி மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அந்த படத்திற்குப் போட்டியாகச் சிம்பு தானே படத்தை இயக்கிய, நடிக்கவுள்ளாராம். ‘மகாமாநாடு’ என்றுபெயரிட்டுள்ள இந்த படத்தை சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் தயாரிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் யார் யாரு நடிக்கவுள்ளார் என்பது குறித்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக சிம்பு மன்மதன், வல்லவன் போன்ற படங்களை இயக்கி, நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கிட்ட தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிம்பு இயக்கவுள்ள இந்த படத்தின் மீது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.