மாநாடு படத்தில் நடிக்கும் நடிகர் சீமான்

 

மாநாடு படத்தில் நடிக்கும் நடிகர் சீமான்

நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த ஆண்டு அறிவித்தார். அதற்காக வெளிநாடு சென்று கடும் பயற்சியெடுத்து தனது உடல் எடையைப் பாதியாகக் குறைத்துக் கொண்டு வந்தார் சிம்பு. இதையடுத்து சிம்புவுடன் ஏற்பட்ட பிரச்னையால் மாநாடு திரைப்படம் கைவிடப்படுவதாகப் படத்தின் தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

மாநாடு

இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியடையப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் மாநாடு திரைப்படம் தொடங்கும் என படக்குழு அறிவித்தது. இந்நிலையில் மாநாடு படப்பிடிப்பு கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. முதற்கட்டப்படபிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், தற்போது ஹைதராபாத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. இப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, மனோஜ், எஸ்.ஜே. சூர்யா, பிரேம்ஜி, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

 

 

இந்நிலையில் மாநாடு படத்தில் நடித்துவரும் நடிகர் உதயா தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநாடு படப்பிடிப்பு தளத்தில் இருந்து சீமானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு நன்றி என தெரிவித்துள்ளார்” என பதிவிட்டுள்ளார். இப்படத்தின் பூஜையிலும் நடிகரும், இயக்குநருமான சீமான் கலந்துகொண்டார். மாநாடு படத்தில் சீமான் கெஸ்ட் ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.