‘மாநாடு படத்திற்காக வெறித்தனமாக உழைக்கும் சிம்பு..வைரல் வீடியோ’.. கமெண்ட்களை தெறிக்கவிடும் ரசிகர்கள் !

 

‘மாநாடு படத்திற்காக வெறித்தனமாக உழைக்கும் சிம்பு..வைரல் வீடியோ’.. கமெண்ட்களை தெறிக்கவிடும் ரசிகர்கள் !

இந்த படம் எப்போது தொடங்கும் என்பது பற்றிய அப்டேட்டை ரசிகர்கள் பல மாதங்களாகக் கேட்டுக் கொண்டே வந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி இந்த படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

நடிகர் சிம்பு,  வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். அதற்காக வெளிநாடு சென்று கடும் பயற்சியெடுத்து தனது உடல் எடையைப் பாதியாகக் குறைத்துக் கொண்டு வந்தார் சிம்பு.

ttn

 அதன் பின்னர், சிம்பு கால் ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால், மாநாடு திரைப்படம் கைவிடப்படுவதாகப்  படத்தின் தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.  இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியடையப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் மாநாடு படப்பிடிப்பு துவங்கவுள்ளது. 

ttn

இந்த படத்திற்காகக் கடுமையாக உழைத்து வரும் சிம்பு, பாக்சிங் பயிற்சி செய்வது போன்ற வீடியோ சமீபத்தில் வெளியானது. அந்த வீடியோ சிம்பு ரசிகர்களிடையே இந்த படத்தைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டியது. இந்த படம் எப்போது தொடங்கும் என்பது பற்றிய அப்டேட்டை ரசிகர்கள் பல மாதங்களாகக் கேட்டுக் கொண்டே வந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி இந்த படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

ttn

மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார் என்றும் பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன், காமெடி நடிகர் கருணாகரன், பாரதி ராஜா மற்றும் சந்திர சேகர் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ttn

இந்த படத்திற்காக உடல் எடையைக் குறைக்கத் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் சிம்பு, தனது வீட்டில் உள்ள ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோவை இயக்குநர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவிற்கு சிம்பு ரசிகர்கள், ” நீ யாருனு இங்க காட்ட வேண்டிய நேரம் தலைவா, வெறித்தனம், தலைவன் வேற லெவல், மரண மாஸ்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.