மாநகராட்சி துப்புரவு வேலைக்கு வந்த எம்.எஸ்.சி மாணவி! – கோவையில் அதிர்ச்சி

 

மாநகராட்சி துப்புரவு வேலைக்கு வந்த எம்.எஸ்.சி மாணவி! – கோவையில் அதிர்ச்சி

எந்த வேலையும் கேவலமானது இல்லை… ஆனால் படித்த படிப்பு சரியான வேலை கிடைப்பது இல்லை என்பதுதான் கேவலமான விஷயம். அப்படி ஒரு சம்பவம் கோயமுத்தூரில் நடந்துள்ளது. கோவை மாநகராட்சியில் 2520 நிரந்தர துப்புறவுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இது தவிர 2308 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கோவை மாநகராட்சியின் துப்புறவுத் தொழிலாளி வேலைக்கு எம்.எஸ்.சி படித்த மாணவி தேர்வு செய்யப்பட்டிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எந்த வேலையும் கேவலமானது இல்லை… ஆனால் படித்த படிப்பு சரியான வேலை கிடைப்பது இல்லை என்பதுதான் கேவலமான விஷயம். அப்படி ஒரு சம்பவம் கோயமுத்தூரில் நடந்துள்ளது. கோவை மாநகராட்சியில் 2520 நிரந்தர துப்புறவுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இது தவிர 2308 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காலியாக உள்ள 549 துப்புரவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அரசு வேலை என்பதால் பி.ஏ, எம்.ஏ, எம்.எஸ்சி, பி.இ படித்தவர்கள் கூட விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த 7300 பேரில் 5200 பேர் பட்டதாரிகள். இவர்களில் முதல் கட்டமாக 321 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

kovai-pg-student

இவர்களுக்கான பணி நியமன ஆணையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இளம் பெண் ஒருவர் துப்புரவு பணியிடத்துக்கான பணி நியமன ஆணையைப் பெற்றது அனைவரின் கண்களையும் உறுத்தியது. நிகழ்ச்சி முடிந்த பிறந்த அந்த பெண்ணிடம் பேசியபோது அவர் கோவை தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்த மோனிகா என்பதும் எம்.எஸ்சி படித்து வருவதும் தெரியவந்தது.
வேலை கிடைத்தது பற்றி அவர் கூறுகையில், “எம்.எஸ்சி படித்து வருகிறேன். துப்புரவு பணிக்கு ஆட்கள் தேவை என்ற அறிவிப்பைப் பார்த்து விண்ணப்பித்திருந்தேன். நேர்காணலிலும் பங்கேற்றேன். படித்திருக்கிறோம் என்பதால் துப்புரவு பணி செய்யமாட்டேன் என்று இல்லை. எந்த வேலையாக இருந்தாலும் செய்வோம். வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி” என்றார்.