மாத விலக்கு பிரச்சனைகளை சரி செய்யும் வீட்டு வைத்தியம்

 

மாத விலக்கு பிரச்சனைகளை சரி செய்யும் வீட்டு வைத்தியம்

பெண்களுக்கு அந்த மூன்று நாட்களின் ரணம் சொல்லித் தீராது. விருந்து, விசேஷங்கள், வெளியூர் பயணம், தேர்வு என்று நமது திட்டங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி உடல் உபாதைகளுடன் நெளிய வைக்கும். பலருக்கும் சரியான இடைவெளியில் மாதவிலக்கு ஏற்படுவதில்லை.

பெண்களுக்கு அந்த மூன்று நாட்களின் ரணம் சொல்லித் தீராது. விருந்து, விசேஷங்கள், வெளியூர் பயணம், தேர்வு என்று நமது திட்டங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி உடல் உபாதைகளுடன் நெளிய வைக்கும். பலருக்கும் சரியான இடைவெளியில் மாதவிலக்கு ஏற்படுவதில்லை. குறிப்பாக, இன்றைய தலைமுறையில் நிறைய கல்லூரி மாணவிகள் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தெரியாமல் தடுமாறி வருகிறார்கள்.

women

சரிவர சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளாதது, நேரத்திற்கு சாப்பிடாமல் தவிர்ப்பது, இரவுகளில் தூக்கத்தைத் தவிர்த்து நீண்ட நேரம் கண்விழித்திருப்பது, மன அழுத்தம் என்று நிறைய காரணங்களால் மாதவிலக்கு சரியான தேதிகளில் நிகழாமல் தள்ளிச் செல்லும்.
இதற்கான தீர்வுகளை நம் உணவு முறைகளிலேயே கொண்டு சரி செய்யலாம்.
கருஞ்சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால், தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
எள்ளை தண்ணீரில் போட்டு, ஊறவைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்சனைகள் தீரும்.

women

கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து, காலை மாலை இரு வேளைகளிலும் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.
கீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் மாதவிலக்கால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
கசகசா, வாழைப்பூ ,மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200கிராம் எடுத்து பொடித்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் விட்டு கஷாயமாக்கி குடித்தால் சரியாகும். அதிக ரத்தப் போக்கு நிற்கும்.