‘மாத்தி மாத்தி பேசுறது, அணி மாறுறது எல்லாம் இந்த வீட்டுக்கு சகஜம் ஆகிடுச்சு’ : கமலின் டார்கெட் இவர்தானா?

 

‘மாத்தி மாத்தி பேசுறது, அணி மாறுறது எல்லாம் இந்த வீட்டுக்கு சகஜம் ஆகிடுச்சு’ : கமலின் டார்கெட் இவர்தானா?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

bb

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த ஒருவாரமாக ஏமாற்றம் , கோபம், சண்டை, அழகை என பலவிதமான கோணங்களில் போட்டியாளர்கள் தங்கள் முகங்களைக் காட்டினர். சாக்ஷியின் – கவின்   காதலை நட்பு என்று சொல்லி அந்தர் பல்டி அடித்த கவின், அதை நினைத்து உருகும் சாக்ஷி, லாஸ்லியா -கவின் நட்பில் விரிசல், வழக்கம் போல மீராவின் அடாவடித்தனம் எனக் கொஞ்சமும் சளைக்காமல் சென்றது பிக் பாஸ் நிகழ்ச்சி. இதனால் கமல் ஹாசன் வருகைக்காக மக்கள் காத்திருந்தனர்.( பிக் பாஸ்  நிகழ்ச்சியில் மட்டும்)

kavin

இந்நிலையில்  இன்றைய புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. நினைத்தாலே இனிக்கும் என்று தலைப்பிட்டுள்ள அந்த வீடியோவில், ‘மாத்தி மாத்தி பேசுறது, அணி மாறுறது எல்லாம் இந்த வீட்டுக்கு சகஜம் ஆகிடுச்சு. ஆனா இதெல்லாம் பதவி மோகத்துக்காக இல்லை. ஒருவிதமான மோகம்… தமிழ்ல எப்படி சொல்லுறது..ஒருவிதமான ஃபீலிங்ஸ்.. ‘என்று கூறி,  இறுதியில் நினைத்தாலே இனிக்கும் என்று சொல்லி பேண்ட் பாக்கெட்டில் இருந்து சாக்லெட்டை எடுத்துக் காண்பித்துக் கண்ணடிக்கிறார் கமல். 

 

இதன் மூலம் கமல் ஹாசன், பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும்  காதல் விவகாரத்தை அலசி ஆராய்வார் என்று எதிர்பார்க்கலாம்.  இதனால் இன்றைய நிகழ்ச்சியைக் காண பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.