மாத்திரையில் கம்பி! அரசு மருத்துவமனைகளில் சிப்ரோபிளாக்சின் மாத்திரைக்கு தடை!!

 

மாத்திரையில் கம்பி! அரசு மருத்துவமனைகளில் சிப்ரோபிளாக்சின் மாத்திரைக்கு தடை!!

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிப்ரோபிளாக்சின் மாத்திரையை பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிப்ரோபிளாக்சின் மாத்திரையை பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பாக்டீரியாவுக்கு எதிராக பென்சிலின் மருந்து உதவும் என்றாலும் சிப்ரோபிளாக்சின் தான் சிறந்த மருந்தாக தமிழகத்தில் வழங்கப்படுகிறது. இந்த மருந்தைத் தயாரிக்கும் கொல்கத்தாவைச் சேர்ந்த மார்பென் லேபாரடரீஸ் தனது தயாரிப்பை இரு மடங்காக உயர்த்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பயோ ஜெனடிக் டிரக்ஸ் என்ற தனது தொழிற்சாலையில் முதலில் 10 முதல் 15 டன் மருந்து தயாரித்து வந்த இந்நிறுவனம் தற்போது 25 டன் அளவுக்கு உற்பத்தியை கூட்டியுள்ளது. உலகம் முழுவதும் இருந்தும் இந்த மருந்துக்கு ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

ராமநாதபுரம் மாவட்டம் ஏறான் துறை கிராமத்தை சேர்ந்த பாண்டி மற்றும் சக்தி ஆகியோர் வயிற்று வலிக்கு சிகிச்சைப்பெற ஏர்வாடி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு சிப்ரோபிளாக்சின்  மாத்திரை கொடுக்கப்பட்டது. மாத்திரையை இரண்டாக உடைத்து பாதியாக உட்கொள்ளுமாறு செவிலியர்கள் கூறியுள்ளனர். இதை அடுத்து, சக்தி என்பவர் தனக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையை பாதியாக உடைக்க முற்பட்ட போது, மாத்திரை வளைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக்தி, அதை உடைத்த போது உள்ளே  சிறிய அளவிலான இரும்பு கம்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதையடுத்து அனைத்து மாவட்ட மருந்து கிடங்குகளில் சிப்ரோபிளாக்சிங்கை திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு  மருத்துவப்பணிகள் கழகநிர்வாக இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.