மாத்திரையில் இரும்பு கம்பி: அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தின் அலட்சியம்; அதிர்ச்சியில் பொதுமக்கள்!

 

மாத்திரையில் இரும்பு கம்பி: அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தின் அலட்சியம்; அதிர்ச்சியில் பொதுமக்கள்!

அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில்  கொடுத்த மாத்திரையில், இரும்புக் கம்பி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம்: அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில்  கொடுத்த மாத்திரையில், இரும்புக் கம்பி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம்  ஏராந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர்  பாண்டி. இவரின் மனைவிக்கு சக்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அருகிலுள்ள ஏர்வாடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு மருத்துவர் இல்லாததால், சக்தியை பரிசோதித்த செவிலியர் அவருக்கு  சிப்ரோஃப்ளக்சின் என்ற மாத்திரையைக் கொடுத்தனுப்பியுள்ளார். 

doctor

வீட்டிற்கு வந்த சக்தி உணவு உண்டுவிட்டு மாத்திரையைச் சாப்பிட மாத்திரையை எடுத்துள்ளார். மாத்திரை பெரிதாக இருந்ததால் உடைத்துச் சாப்பிட நினைத்து அதை உடைத்த போது, சக்தி அதிர்ச்சியடைந்துள்ளார். அதில் இரும்பு கம்பி ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து அவர் வேறு மாத்திரையை உட்கொண்டதாகத் தெரிகிறது.  இந்த செய்தியானது அப்பகுதி மக்கள்  மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ramnad

எளியவர்கள் தனியார் மருத்துவமனையை நாட முடியாது என்பதால் தான் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இருப்பினும் அங்கேயும் இத்தனை முரண்பாடுகளும், கலப்படங்களும் இருந்தால் சாமானிய மக்களின் நிலை கேள்விக்குறியாக மாறிவிடும். அதனால் இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.