“மாதவரம் தற்காலிக பழ, பூச் சந்தை செயல்படவில்லை”…காரணம் இது தான்!

 

“மாதவரம் தற்காலிக பழ, பூச் சந்தை செயல்படவில்லை”…காரணம் இது தான்!

இந்த பூ மார்க்கெட் மாதாவரத்தில் தொடர்ந்து செயல்படம் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னை கோயம்பேட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து நடமாடும் வாகனத்தின் மூலம்  கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை  செய்யபட்டு வந்தது. அப்போது பூ மார்கெட்டில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பூ மார்க்கெட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், இந்த பூ மார்க்கெட் மாதாவரத்தில் தொடர்ந்து செயல்படம் என்று அறிவிக்கப்பட்டது. அதே போல, பழக்கடையும் மாதவர சந்தைக்கு மாற்றப்பட்டது.

ttn

ஆனால், கோயம்பேடு வியாபாரிகள் மாதவரம் சென்று வியாபாரம் செய்ய மறுப்பு தெரிவிப்பதால் மாதவரம் தற்காலிக சந்தை செயல்படவில்லை என்று தகவல்கள் வெளியாகிறது. மாதவரத்தில் விற்பனை செய்ய விரும்பாத வியாபரிகள், நேற்று முதல் தங்கள் கடைகளை அடைத்துள்ளனர். இந்நிலையில், மாதவரத்தில் விற்பனை செய்ய விருப்பம் இல்லாததால் பழக்கடை வியாபரிகளும் தங்கள் கடைகளை அடைத்துள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் நிலையில், மக்கள் அதிகமாக வந்து செல்லும் கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டது சென்னை வாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் சவாலான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில், வியாபாரிகள் கடைகளை அடைந்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.