மாதம் 28,000 வாங்கிய மெட்ரோ ரயில் ஊழியர்களை நீக்கிவிட்டு, 68,000க்கு புதிய ஊழியர்கள்?

 

மாதம் 28,000 வாங்கிய மெட்ரோ ரயில் ஊழியர்களை நீக்கிவிட்டு, 68,000க்கு புதிய ஊழியர்கள்?

மாதம் 28,000 சம்பளத்துக்கு நிரந்தரப் பணியாளர்கள் பணியில் சேர தயாராக இருக்கும்போது, ரூ.68,000-க்கு ஒப்பந்த பணியாளர்களை மெட்ரோ நிர்வாகம் பணியில் அமர்த்தியிருப்பதை தொழிலாளர்கள் சந்தேகத்தோடு பார்க்கின்றனர்.

சென்னை மெட்ரோ ஊழியர்களின் நலனுக்காக தொழிலாளர் சங்கம் தொடங்கிய 8 பேரை பணிநீக்கம் செய்தது, அவர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்தது என ஏற்கெனவே தொழிலாளர் விஷயங்களில் கடுமையான போக்கை சி.எம்.ஆர்.எல். நிர்வாகம் கடைபிடித்துவந்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட, இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இன்றுவரை பணி வழங்கப்படவில்லை. இதுபோக, மெட்ரோ ரயில் இயக்குபவர், டிக்கெட் வழங்குபவர், நிலைய பரிசோதகர், பாதுகாப்புப் பணிகளில் என படிப்படியாக தனியார் ஒப்பந்தப் பணியாளர்களைப் புகுத்தியது சி.எம்.ழில்ஆர்.எல். நிர்வாகம்.

Chennai Metro

உச்சமாக, சி.எம்.ஆர்.எல்ல் இருந்துவரும் ஒரே நிரந்தரப்பணி மற்றும் முக்கிய பொறுப்பான நிலைய கட்டுப்பாட்டாளர் (Station Controller) பணியையும் நிரந்தர ஊழியர்களிடமிருந்து பறித்து, அதற்கு பதிலாக Station Incharge என்ற பெயரில் எந்தவித பயிற்சி, அனுபவம் இல்லாத தனியார் ஒப்பந்த ஊழியர்களை நியமித்திருக்கிறது நிர்வாகம். மாதம் 28,000 சம்பளத்துக்கு நிரந்தரப் பணியாளர்கள் பணியில் சேர தயாராக இருக்கும்போது, ரூ.68,000-க்கு ஒப்பந்த பணியாளர்களை மெட்ரோ நிர்வாகம் பணியில் அமர்த்தியிருப்பதை தொழிலாளர்கள் சந்தேகத்தோடு பார்க்கின்றனர். இதுவெறும் தொழிலாளர் பணி சம்பந்தமானது மட்டுமல்ல, பயணிகள் பாதுகாப்பு பிரச்னையும்கூட. காரணம், முன்பு நிலைய கட்டுப்பாட்டாளர்களாக பணியில் இருந்தவர்கள் டெல்லி, மும்பை என பல்வேறு மெட்ரோ நிலையங்களில் பயிற்சி எடுத்தபிறகுதான் அப்பொறுப்பில் அமர்த்தப்பட்டனர். ஆனால், புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி குறித்து சந்தேகம் நிலவுவதால், பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியே என தொழிலாளர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.