மாணவ, மாணவிகளை குறிவைக்கும் போதைமருந்து வியாபாரிகள் ! சாக்லெட்டில் போதைமருந்தை கலந்து விற்ற 2 பேர் கைது

 

மாணவ, மாணவிகளை குறிவைக்கும் போதைமருந்து வியாபாரிகள் ! சாக்லெட்டில் போதைமருந்தை கலந்து விற்ற 2 பேர் கைது

பெங்களூருவில் பள்ளி அருகே போதை சாக்லெட்டுகளை மாணவர்களுக்கு விற்று வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
பள்ளிகளுக்கு அருகே மாணவ, மாணவிகளுக்கு மர்ம நபர்கள் சிலர் போதை சாக்லெட்டுகளை விற்பனை செய்வதாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை பிடித்து விசாரித்தபோது கனடாவில் இருக்கும் போதைப் பொருள் விற்பனையாளரை இணையதளம் மூலம் அணுக போதை மருந்து கலந்த சாக்லெட்டுகளை கள்ளத் தனமாக வாங்கி விற்றது தெரியவந்துள்ளது. அதாவது கனாடாவில் இருந்து குழந்தைகளுக்கான பால் பவுடர் டின்கள் மற்றும் சாக்லேட் பாக்கெட்டுகளில் போதை மருந்துகள் கூரியர் மூலம் இந்தியாவிற்கு வந்து சேர்கிறது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த 2 பேரை கைது செய்தது போலீஸ்.

drug

கைது செய்யப்பட்டவர்கள் அதீஃப் சலீம், மற்றும் ரோஹித் தாஸ்  என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சலீம் கடந்த 45 நாட்களாக சுதகுண்டேபல்யாவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தார். அவர் தனது பிளாட்டில் மருந்துகளை பொட்டலங்களாக அடைத்து மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பிற நகரங்களுக்கு அனுப்பி வந்துள்ளார்.  அவரது கூட்டாளியான தாஸ், மருந்துகளை முறையாக டெலிவரி செய்வது வழக்கம்.
மீட்கப்பட்ட மருந்துகளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ஒரு கிராமுக்கு அதிகபட்சம் ரூ.4,000. போதைப் பொருள் விற்பதெற்கென கனடாவில் ஒரு இணையதளமே உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளை குறிவைத்து போதை சாக்லெட்டுகளை கொடுத்து, இதை சாப்பிட்டால் அஜீரண கோளாறு சரியாகும் என்று கூறி விற்பனை செய்வது வழக்கம். 
முதலில் இலவசமா சாக்லெட் தருகிறார்கள். பின்னர் அவர்கள் ருசி கண்டவுடன் காசு கொடுத்தால்தான் கொடுக்க முடியும் என சொல்லி விற்பனை செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது. இவர்களிடம் இருந்து போதை சாக்லெட்டுகள், ஹாஷிஷ் எண்ணெய், சிகரெட் குழாய்கள், கார், பைக் ஆகியவற்றை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.