மாணவிகள் வாழ்ந்து காட்ட வேண்டும்! தற்கொலை பற்றி நினைக்காதீர்கள்! கவர்னர் தமிழிசை வேண்டுகோள்!

 

மாணவிகள் வாழ்ந்து காட்ட வேண்டும்! தற்கொலை பற்றி நினைக்காதீர்கள்! கவர்னர் தமிழிசை வேண்டுகோள்!

புற்றுநோயில் இருந்து விடுபடுவதற்கான நிவாரணம், ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் கலந்துக் கொண்டு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும் போது, கல்லூரி மாணவிகள் எந்த காரணத்திற்காகவும் தற்கொலை செய்துக் கொள்வதைப் பற்றி நினைக்கவே கூடாது என்று பேசினார்.

புற்றுநோயில் இருந்து விடுபடுவதற்கான நிவாரணம், ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் கலந்துக் கொண்டு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும் போது, கல்லூரி மாணவிகள் எந்த காரணத்திற்காகவும் தற்கொலை செய்துக் கொள்வதைப் பற்றி நினைக்கவே கூடாது என்று பேசினார். மேலும் பேசுகையில்,  ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஆண் இருப்பதாக எல்லாரும் கூறுவார்கள். ஆனால் எனது கணவர் எனக்கு பின்னால் அல்ல எனது பக்கத்தில் இருந்து அனைத்தையும் சொல்லிக் கொடுத்ததால் தான் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறேன்.

tamilisai

கல்லூரி மாணவிகள் யாரும் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைக்காதீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே. நாங்கள் ஸ்கேன் செய்யும்போது 2 சென்டி மீட்டர் தான் அந்த குழந்தை இருக்கும். அதற்குள் இதயத் துடிப்பு வரும் போது அதை பார்த்து அந்த அம்மா எவ்வளவு மகிழ்ச்சி அடைவார். ஆனால் அந்த இதயத்துடிப்பை நிறுத்தும் உரிமை உங்களுக்கு கிடையவே கிடையாது. எனவே, இளைய தலைமுறை எந்த நிலை வந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்க வேண்டுமே, தவிர வீழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கவே கூடாது என்று பேசினார்.
விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜன், முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே, தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி, போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பி.வி.விஜயராகவன் உள்பட பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.