மாணவிகளை வீட்டிற்கு அழைக்க கூடாது! | கல்லூரி பேராசிரியர்களுக்கு தடா!

மாணவிகளை வீட்டிற்கு அழைக்க கூடாது! | கல்லூரி பேராசிரியர்களுக்கு தடா!

தமிழகம் முழுக்கவே பெரும் அதிர்வலைகளை எழுப்பிய பொள்ளாச்சி விவகாரத்தை அத்தனை சீக்கிரத்தில் மக்கள் மறந்து போயிருக்க மாட்டார்கள் என்றே நம்புவோம். அப்படி பொள்ளாச்சி விவகாரத்தையும், ‘என்னை விட்டுடுங்கண்ணா…’ என்று கண்ணீருடன் கதறிய தங்கையின் குரலையும் நீங்கள் மறக்காமல் இருந்தால், உங்களுக்கு அருப்புக்கோட்டை பேராசிரியர் செய்த வஞ்சக செயலும் நினைவில் இருக்கும். 

students

ஆம்… அந்த மாதிரியான கொடுமைகளைச் செய்யும் பேராசிரியைகளும் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதை இத்தனை வருஷங்களுக்கு பிறகு சென்னை பல்கலைகழகத்தில் வீற்றிருக்கும் அதிகாரிகளும், கல்வியாளர்களும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் ரொம்பவே வேகமாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். 
கல்வி தொடர்பாக மாணவிகளை பேராசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைக்க சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கல்வி தொடர்பாக மாணவிகளை பேராசிரியர்களோ, விரிவுரையாளர்களோ தங்கள் வீடுகளுக்கு அழைக்கக் கூடாது. மாணவிகளை பேராசிரியர்கள் வெளியில் அழைத்துச் செல்வதோ, வெளியில் தங்குவதோ கூடாது. அவ்வாறு கல்வி தொடர்பாக தங்க வேண்டுமானால் பல்கலைக்கழகத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என்றெல்லாம் அந்த சுற்றறிக்கை சொல்கிறது.

university of madras

சென்னை பல்கலைக்கழகத்தில் பாலியல் புகார்களை விசாரிக்க பேராசிரியர் ரீடா ஜான் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே பாலியல் புகார்களை விசாரணை குழு, பதிவாளர், துணை வேந்தர் ஆகியோரிடம் மாணவிகளும், பேராசிரியைகளும் தெரிவிக்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது போல் அறிவிப்பு வெளியிடுவதால் மாணவிகள் தவறாக வழிநடத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் இது போன்ற அறிவிப்புகள் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.