மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த பேராசிரியர்… மெடிக்கல் காலேஜில் அரங்கேறும் கொடுமை!

மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த பேராசிரியர்… மெடிக்கல் காலேஜில் அரங்கேறும் கொடுமை!

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி உதவிப்பேராசிரியர் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து அதனை செல்போனில் படம்பிடித்து மிரட்டியதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று புகாருக்குள்ளான உதவிப்பேராசிரியர் விளக்கமளித்துள்ளார்.

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகவும் எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவில் மருத்துவராகவும் பணிபுரிந்து வருபவர், மாணவிகளை வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. தனது விருப்பத்தை ஏற்காவிட்டால் மருத்துவப் படிப்பு முடிக்க சான்றிதழ் வழங்க மாட்டேன் என மிரட்டி தங்களை பணிய வைத்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்கப்பட்டது. மாணவிகளின் புகார் குறித்து விசாரிக்க ழுழு அமைக்கப்பட்டுள்ளதாக புதிய தலைமுறையிடம் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புகாருக்குள்ளான உதவிப்பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

rape

தான் எந்த தவறும் செய்யவில்லையென்றும், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே தம்மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் புகாருக்குள்ளான தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி உதவிப்பேராசிரியர் தெரிவித்துள்ளார். தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இந்தப் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாணவிகள் கொடுத்ததாக கூறப்படும் புகாரில் புகார்தாரர் பெயர் இல்லையென்றும், அது மொட்டை கடிதம் போன்றது என்றும் மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் விளக்கமளித்துள்ளார்.