மாணவிகளுடன் சாலையில் நடனம்: கூலாக வலம் வரும் நீலகிரி ஆட்சியர்!

 

மாணவிகளுடன் சாலையில் நடனம்: கூலாக வலம் வரும் நீலகிரி ஆட்சியர்!

உதகைக்கு சுற்றுலா வரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ள ஹேப்பி சாலையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.

நீலகிரி: உதகைக்கு சுற்றுலா வரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ள ஹேப்பி சாலையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இன்னும் இரண்டு மாதங்களில் கோடை சீசன் துவங்கவுள்ளதால் உதகைக்கு லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிய உள்ளனர்.

ooty

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், நெரிசலை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே சுற்றாலா வரும் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக சேரிங்கிராஸ் முதல் கேசினோ ஜங்கசன் வரையுள்ள வர்த்தக சாலையில் மாதந்தோறும் சனிக்கிழமைகளில் ஹேப்பி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, போக்குவரத்தை ரத்து செய்துவிட்டு, சாலையில் நடனம் ஆடுவது, பாண்டி, சதுரங்க விளையாட்டு, கேரம், பல்லாங்குழியாட்டம், வாலி பால் போன்ற விளையாட்டுகளை விளையாடும் விதமாக ஹேப்பி சாலை மாற்றப்பட்டுள்ளது.

innocent

இந்த சாலை அமைத்தால், தங்களின் வர்த்தகம் பாதிக்கப்படும் என வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், இன்று ஹேப்பி சாலையை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்து பள்ளி மாணவர்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.