மாணவர்கள் நலனுக்காக 70,000 ரூபாய் செலவழித்த அரசு பள்ளி ஆசிரியர்?!..

 

மாணவர்கள் நலனுக்காக 70,000 ரூபாய் செலவழித்த அரசு பள்ளி ஆசிரியர்?!..

சதிஷ் வகுத்த திட்டங்களில் முக்கியமானது, தான் பள்ளிக்கு சரியான நேரத்தில் வந்து போகாமல் இருந்தால் தன்னிடம் 1,300 ரூபாய் அபராதத்தை பெறும் உரிமையை அந்த கிராம மக்களுக்கு வழங்கியிருக்கிறார்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முன் மாதிரியாக செயல்படுகிறார் தெலங்கானா மாநிலம் அடவிதேவுலப்பல்லியை சேர்ந்த துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சதிஷ் (30).  தலைமை ஆசிரியர் சதிஷ், கிராமத்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். அதற்கு அவரின் கடின உழைப்பும், அவர் வகுத்த திட்டங்களுமே காரணம். 21 மாணவர்கள் மட்டுமே இருந்த பள்ளியில், இவரது நடவடிக்கையால் தற்போது 63 மாணவர்கள் பயில்கின்றனர்.

j

சதிஷ் வகுத்த திட்டங்களில் முக்கியமானது, தான் பள்ளிக்கு சரியான நேரத்தில் வந்து போகாமல் இருந்தால் தன்னிடம் 1,300 ரூபாய் அபராதத்தை பெறும் உரிமையை அந்த கிராம மக்களுக்கு வழங்கியிருக்கிறார். இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் ராம ராவ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, இப்படி ஒரு ஆசிரியர் கிடைக்க எங்கள் பிள்ளைகள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த சதிஷ், அரசாங்க ஆசிரியர்கள் மீது மக்களுக்கு எப்போதும் அவநம்பிக்கை இருக்கிறது. ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளி வருவதில்லை, பாடம் நடத்துவதில்லை என்கின்றனர். அரசு ஆசிரியர்கள் மீது நன்மதிப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி என்கிறார்.

sdvz

இதுமட்டுமல்லாது மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி கிடைக்க தன் சொந்த பணம் 70,000 ரூபாயை செலவு செய்துள்ளார். குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்ய அரசாங்கம் அளிப்பதாக சொன்ன பணத்தை தராததால் தன் கைக்காசை போட்டு அதனை செயல்படுத்தியிருக்கிறார். இரண்டு முறை பணி இடமாற்றத்துக்கான வாய்ப்பு கிடைத்தும், இந்த கிராம மக்களை நேசிப்பதால் இந்த பள்ளியிலேயே பணிபுரிந்து வருகிறார்.