மாணவர்களை சுறுசுறுப்பாக்கும் ராகி கஞ்சி

 

மாணவர்களை சுறுசுறுப்பாக்கும் ராகி கஞ்சி

நமது அன்றாட உணவு வகைகளில் அவசியம் நாம் சேர்த்து கொள்ள வேண்டிய சிறுதானியங்களில் மிகவும் முதன்மையானது ராகி. நூடுல்ஸ், ப்ரெட் என மாறிவிட்ட இன்றைய உலகத்தில் காலை உணவிற்கு மிகவும் ஏற்றது ராகி கஞ்சி. ராகியில் கால்சியமும் , இரும்புச் சத்தும் நிறைந்து உள்ளதால் 6 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.செய்வதற்கு மிகவும் எளிது. சுவையும் அபாரமாக இருக்கும்

நமது அன்றாட உணவு வகைகளில் அவசியம் நாம் சேர்த்து கொள்ள வேண்டிய சிறுதானியங்களில் மிகவும் முதன்மையானது ராகி. நூடுல்ஸ், ப்ரெட் என மாறிவிட்ட இன்றைய உலகத்தில் காலை உணவிற்கு மிகவும் ஏற்றது ராகி கஞ்சி. ராகியில் கால்சியமும் , இரும்புச் சத்தும் நிறைந்து உள்ளதால் 6 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.செய்வதற்கு மிகவும் எளிது. சுவையும் அபாரமாக இருக்கும்.

ragi

தேவையான பொருட்கள்
ராகி மாவு – 3டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 2டேபிள் ஸ்பூன் 
பால்  – 1/2கப்
ஏலக்காய் பொடி – ஒரு சிட்டிகை
செய்முறை
முதலில் ராகி மாவை கட்டிகள் இல்லாமல் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கரைத்து வைத்த ராகி மாவை அடுப்பில் ஏற்றி, கைவிடாமல் நன்றாக கிளறி விட வேண்டும்.

ragi

தொடர்ந்து கிளறிக் கொண்டிருக்க வேண்டும். இல்லையானால், மாவு கட்டியாகிவிடும். அடுப்பிலேற்றிய மாவை 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு பின் பால், தூளாக்கி வைத்திருக்கும் வெல்லம் , ஏலக்காய் பொடி சேர்த்து சூடாக பரிமாறலாம்.  வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டி அல்லது பனைவெல்லம் உபயோகப்படுத்தினால் சுவையுடன், ஆரோக்கியமும் மேம்படும். வெல்லத்திற்கும், பாலுக்கும் பதிலாக கஞ்சியை சிறிது ஆறவிட்டு சிறிது மோர், உப்பு, பெருங்காயம்  சேர்த்தும் பருகலாம்.  வாரம் இருமுறையாவது  படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவில் இந்த ராகி கஞ்சியை கொடுத்து வந்தால், அவர்கள் சோர்வின்றி, சுறுசுறுப்புடன்  காணப்படுவார்கள்.