மாணவர்களுக்கு வாழை இலையில் மதிய உணவு..அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் !

 

மாணவர்களுக்கு வாழை இலையில் மதிய உணவு..அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் !

வாழை இலையில் உண்ணுவது எவ்வளவு மகத்தானது என்று நம்மில் பலருக்குத் தெரியாது. குணப்படுத்த முடியாத புற்றுநோயைக் கூட வாழை இலையில் உண்பது மூலம் தடுக்க முடியும்.

வாழை இலையில் உண்ணுவது எவ்வளவு மகத்தானது என்று நம்மில் பலருக்குத் தெரியாது. குணப்படுத்த முடியாத புற்றுநோயைக் கூட வாழை இலையில் உண்பது மூலம் தடுக்க முடியும். அதுமட்டுமில்லாமல், எந்த நோய்ப் பாதிப்பும் இன்றி ஆரோக்கியமாக வாழ முடியும். இதனால் தான் நம் முன்னோர்கள் வாழை இலையில் உண்ணுபதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால், இப்போது அதெல்லாம் மாறி கம்பியூட்டர் இலை தான் என்ற நிலைக்கு வந்துவிட்டது. 

ttn

இந்நிலையில், புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறப்படுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லியனூர் கொம்யூன், கீழ்சாத்தமங்கலம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் தினமும் வாழை இலையில் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. முதன் முதலில் இந்த பள்ளியில் உள்ள மாணவர்களும் தலைமை ஆசிரியரும் இணைந்து பள்ளியிலிருந்த எல்லா பிளாட்டிக்குகளையும் அப்புறப்படுத்தி நெகிழியில்லா பள்ளியாக மாற்றியுள்ளனர். 

ttn

இதனையடுத்து தமிழரின் பாரம்பரியமான வாழை இலையில் உண்ணும் பழக்கத்தைக் கடந்த 4 மாதமாக இந்த பள்ளியில் கடைப்பிடித்து வருகிறார்கள். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சி கல்வித்துறை அதிகாரிகளிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. மாணவர்களுக்கு வாழை இலையில் உணவு கொடுப்பதற்காகச் சிறிய வாழைத்தோட்டம் அமைப்பதற்கும் ஏற்பாடு செய்து வருகிறார்களாம்.