மாணவர்களுக்கான மாலை சிற்றுண்டி | சத்தான குழிப்பணியாரம்

 

மாணவர்களுக்கான மாலை சிற்றுண்டி | சத்தான குழிப்பணியாரம்

‘பாஸ்ட்புட் காலமாக இருக்கிறது. நாங்கள் எல்லாம் ஹோட்டலில் சாப்பிடுவதே கிடையாது’ என்று பெருமை பேசும் பெற்றோர்கள் தான், கடைகளில் விற்கிற பிரெட், பிஸ்கெட், சிப்ஸ் என்று வகைவகையான நொறுக்கு தீனிகளை கலப்படமில்லாதது என்று நம்பி குழந்தைகளுக்கு வாங்கித் தருகிறார்கள்.

‘பாஸ்ட்புட் காலமாக இருக்கிறது. நாங்கள் எல்லாம் ஹோட்டலில் சாப்பிடுவதே கிடையாது’ என்று பெருமை பேசும் பெற்றோர்கள் தான், கடைகளில் விற்கிற பிரெட், பிஸ்கெட், சிப்ஸ் என்று வகைவகையான நொறுக்கு தீனிகளை கலப்படமில்லாதது என்று நம்பி குழந்தைகளுக்கு வாங்கித் தருகிறார்கள். மாலை சிற்றுண்டிகளை வீட்டிலேயே தயாரித்து, குழந்தைகளுக்குத் தந்தால், சுவையோடு, ஆரோக்கியமும், சத்துக்களும் கிடைக்கும். வெல்லம் சேர்த்து செய்வதால் குழிப்பணியாரத்தில் இரும்பு சத்துக்கள் அதிகமிருக்கிறது. 

குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள் 
பச்சரிசி-1கப்
புழுங்கலரிசி-1கப்
உளுத்தம்பருப்பு-1மேஜைக்கரண்டி
தேங்காய்-1மூடி
வெந்தயம் –சிறிது
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை
பச்சரிசி, புழுங்கலரிசி வெந்தயம் உளுத்தம்பருப்பு இவற்றை தனித்தனியாக 4மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் ஊற வைத்தவைகளை ஒன்றாக கிரைண்டரில் அரைத்து  8 மணிநேரம் புளிக்க வைக்கவும். மாவு, நன்றாக புளித்து தயாரானது, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, மாவில் சேர்த்து காரப் பணியாரமாகவோ அல்லது, தேங்காய், வெல்லம் எல்லாம் சேர்த்து இனிப்பு பணியாரமாகவோ குழிப் பணியாரசட்டியில்  ஊற்றி எடுக்கலாம். குழிப்பணியாரம் செய்யும் பொழுது, நல்லெண்ணெய் பயன்படுத்தினால் சுவை கூடுதலாகவும், சத்துக்களும் கிடைக்கும். காரப் பணியாரம் செய்யும் பொழுது, நிறைய சின்ன வெங்காயம் நறுக்கிப் பயன்படுத்தலாம்.