மாணவர்களின் போராட்டம் எதிரொலி: கட்டண உயர்வை வாபஸ் பெற்ற ஜேஎன்யூ கல்லூரி!! 

மாணவர்களின் போராட்டம் எதிரொலி: கட்டண உயர்வை வாபஸ் பெற்ற ஜேஎன்யூ கல்லூரி!! 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுவந்த மாணவர்களின் போராட்டத்தையடுத்து விடுதிக்கட்டண உயர்வு திரும்ப பெறப்படவுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் விடுதிக்கு வசூலிக்கப்பட்டு வந்த 2,500 ரூபாய் கட்டணத்தை திடீரென ரூ. 6,500 ஆக பல்கலைக்கழகம் உயர்த்தியது. இதனை கண்டித்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் உணவு உண்ணும் பகுதியில் ஆடை கட்டுப்பாடு, 24 மணிநேரமும் இயங்கிவந்த நூலகம் மற்றும் கேன்டீன் நேரம் குறைப்பு, விடுதிக்கு இரு தரப்பு மாணவர்கள் செல்லும் நேரத்தில் கட்டுப்பாடு, பூங்காவில் மாணவர்கள் செல்ல கட்டுப்பாடு போன்றவற்றை கண்டித்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். 

JNU students

இந்நிலையில் இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில், உயர்த்தப்பட்ட கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என்றும், பொருளாதாரத்தின் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு திரும்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.