மாணவர்களின் கல்வியில் ஒளியேற்றிய அகரம்! சூர்யாவின் புதிய சாதனை! 

 

மாணவர்களின் கல்வியில் ஒளியேற்றிய அகரம்! சூர்யாவின் புதிய சாதனை! 

அகரம் விதை திட்டம் மூலம் இந்த ஆண்டு உயர்கல்வி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது.

அகரம் விதை திட்டம் மூலம் இந்த ஆண்டு உயர்கல்வி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது.

பொருளாதார மற்றும் சமூகக் காரணங்களால் உயர்கல்வி பெற முடியாத சூழலில் இருக்கும் மாணவர்களைத் தேர்வு செய்து வாய்ப்பு தரும் அகரம் விதை திட்டத்தின் 2019ம் ஆண்டுக்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த ஆண்டு கல்வி உதவி வேண்டி ஏழாயிரம் விண்ணப்பங்கள் வந்தன. அவர்களில் அகரம் உதவி மிகவும் தேவைப்படும் மாணவர்களைத் தேர்வு செய்யும் பணி கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்றது. ஏராளமான தன்னார்வலர்கள் அர்ப்பணிப்புடன் இந்தப் பணியில் இணைந்தனர். பெருமைமிகு கல்வி நிறுவனங்கள் தங்கள் சமூகப் பங்களிப்பாக இடங்களை அளிக்க, இந்த ஆண்டு 500 மாணவர்கள் விதை திட்டம் மூலம் உயர்கல்வி சேர்ந்துள்ளனர்.

Agaram

கல்வி விகிதம் குறைவாக உள்ள திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் அதிக வாய்ப்பு பெற்றுள்ளனர்.இந்த ஆண்டு தேர்வான 500 விதைகளில் பெண்களே அதிகம். 354 பேர் பெண்கள். கல்வியறிவு வளர்ந்துள்ள இந்தக் காலத்திலும், இந்த 500 பேரில் 406 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகளே! இவர்களில் 154 பேர் தந்தையை இழந்தவர்கள்.

இதுபோன்ற ஏராளமான சமூகப் புள்ளிவிவரங்களை விதை தேர்வுமுறையில் அறிந்தோம்.  அகரம் கடந்த 10 ஆண்டுகளில் 3,000 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. எளியோரின் வாழ்வில் ஏற்பட்ட இந்த மாற்றத்தில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது அகரம்.