மாட்டு சாணத்தில் வெளியான நச்சுவாயுவால் உயிரிழந்த விவசாயிகள்

மாட்டு சாணத்தில் வெளியான நச்சுவாயுவால் உயிரிழந்த விவசாயிகள்

இத்தாலியில்  மாட்டுச் சாணத்தில் இருந்து வெளியான நச்சு வாயுவை சுவாசித்ததால் நான்கு பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

இத்தாலியில்  மாட்டுச் சாணத்தில் இருந்து வெளியான நச்சு வாயுவை சுவாசித்ததால் நான்கு பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

பாவியா எனும் கிராமத்தில்  கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி பண்ணை செயல்பட்டு வருகிறது. அதில் மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட உரத்தில் இருந்து வெளியேறிய கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்ஸைடு) சுவாசித்ததால் பிரேம் சிங், தார்செம் சிங், அர்மிந்தர் சிங், மஜிந்தர் சிங் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதில் பிரேம் சிங், மற்றும் தார்செம் சிங் பண்ணை உரிமையாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Cow

ஆலையின் தொழிலாளர்களான அர்மிந்தர் சிங், மஜிந்தர் சிங் ஆகியோர் உரம் உள்ள தொட்டியை சுத்தம் செய்யும்போது அதில் தவறி விழுந்தனர். அவர்களை காப்பாற்ற சென்ற உரிமையாளர்கள், அவர்களும் நச்சுவாயு சுவாசித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

புற்றுநோய் சிகிச்சை மற்றும் பிறநோய்களுக்கான மருந்து தயாரிப்பில் பசு மாட்டின் கோமியத்தை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு கூறிவரும் நிலையில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியது பதைபதைக்க வைக்கிறது.