மாட்டு கோமியம் புற்றுநோயை குணப்படுத்தும்: புது கண்டுபிடிப்பை வெளியிட்ட பா.ஜ.க வேட்பாளர்

 

மாட்டு கோமியம் புற்றுநோயை குணப்படுத்தும்: புது கண்டுபிடிப்பை வெளியிட்ட பா.ஜ.க வேட்பாளர்

2008-ஆம் ஆண்டு சாத்வி பிரக்யா, சிவ நாராயண் கோபால் சிங் உள்ளிட்ட காவி தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 10 நபர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் சாத்வி பிரக்யா. தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள இவரை போபால் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்து வருகின்றன. ஆனால் மோடியும், பாஜக தரப்பினரும் சாத்விக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

sadhvi

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 6-ஆவது கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பாக மூத்த தலைவர் திக் விஜய் சிங் நிறுத்தப்பட்டுள்ளார். எனவே அங்கு சாத்வி பிரக்யா தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

sad

மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளை சொல்லி ஜாமின் பெற்றிருக்கிறார் சாத்வி. பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம், காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறி கண்ணீர் வடிக்கிறார்.

தற்போது புற்றுநோயை குணப்படுத்தும் புது டெக்னிக் ஒன்றை பற்றி கூறியுள்ளார். மாட்டு கோமியம் மற்றும் பஞ்சகவ்யா ஆகியவை தனது புற்றுநோயை குணப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், பசுவை பின்புறம் இருந்து கழுத்து வரை தடவி கொடுப்பதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் எனவும் கூறியிருக்கிறார்.

sadh

2008-ஆம் ஆண்டு சாத்வி பிரக்யா, சிவ நாராயண் கோபால் சிங் உள்ளிட்ட காவி தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 10 நபர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் பலமுறை ஜாமின் கேட்டுவந்தார் சாத்வி, அப்போதெல்லாம் மறுத்த நீதிமன்றம் தேர்தலையொட்டி ஜாமின் அளித்துள்ளது கவனிக்கப்பட வேண்டியது.

இதையும் வாசிக்க: முன்னாள் முதல்வர் மகன் கொலை: சொத்துக்காக மனைவியே கொன்றதாக பகீர் தகவல்?!