மாட்டுக் கறி, பன்றிக் கறி டெலிவரி: ஜொமோட்டோ ஊழியர்கள் போர்க்கொடி!

 

மாட்டுக் கறி, பன்றிக் கறி டெலிவரி: ஜொமோட்டோ ஊழியர்கள் போர்க்கொடி!

பன்றி கறி மற்றும் மாட்டுக் கறி டெலிவரி செய்யச் சொல்வதற்கு எதிராக ஜொமோட்டோ  ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் .

மாட்டுக் கறி, பன்றிக் கறி டெலிவரி: ஜொமோட்டோ ஊழியர்கள் போர்க்கொடி!

கொல்கத்தா: பன்றி கறி மற்றும் மாட்டுக் கறி டெலிவரி செய்யச் சொல்வதற்கு எதிராக ஜொமோட்டோ  ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இந்தியா முழுவதும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் சேவையில் உபர், ஸ்விகி, ஜொமோட்டோ   ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால் ஜொமோட்டோவில் ஆர்டர் செய்த உணவை நான் கேன்சல் செய்கிறேன் என்று டிவிட்டரில் கூறினார். இதற்கு பதிலளித்த ஜொமோட்டோ  நிறுவனம், உணவுக்கு மதம் எதுவும் கிடையாது. உணவே ஒரு மதம் தான் என்று பதிலடி கொடுத்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. உணவில் கூடமதத்தை  கொண்டுவருவது தவறான உதாரணம் என்று பலர் கருத்து கூறி வந்தனர்.

இந்நிலையில், கொல்கத்தாவில் பன்றி கறி மற்றும் மாட்டுக்கறி டெலிவரி செய்யச் சொல்வதற்கு எதிராக ஜொமோட்டோ   ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இஸ்லாமியருக்குப் பன்றிக் கறியையும், இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாட்டுக்கறியையும்  கொடுப்பது எங்களுக்குள் தயக்கத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து அதிகாரியிடம் கூறிய பின்பும் பதில் ஏதுமில்லை. இதனால் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.  

ஜொமோட்டோ ஊழியர்களின் இந்த போராட்டத்திற்கு மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜீப் பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.