மாட்டிறைச்சிக்கு ஆதரவாக களமிறங்கிய நெட்டிசன்கள்..! ட்விட்டரில் ட்ரெண்டாகும் #BeefForLife

 

மாட்டிறைச்சிக்கு ஆதரவாக களமிறங்கிய நெட்டிசன்கள்..!  ட்விட்டரில் ட்ரெண்டாகும் #BeefForLife

நாகை மாவட்டத்தில் மாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாகையில் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதற்காக இளைஞர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், #beef4life, #WeLoveBeef, #BeefForLife ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன

நாகை அடுத்துள்ள பொரவச்சேரி  கிராமத்தை சேர்ந்த முஹம்மது பைசான் கடந்த 9 ஆம் தேதி மாட்டுசூப் குடித்துள்ளார்.  அப்போது எடுத்த புகைப்படத்தை ‘மாட்டுக்கறியுடன் நான்’என முகநூலில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து இல இளைஞர்கள் பைசான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். சரியாக திட்டமிட்டு பைசான் கடைவீதி வழியாக சென்று கொண்டிருக்கும்போது அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், கணேஷ்குமார், மோகன்குமார், அகஸ்தியன் ஆகியோர் அவரை வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளனர்.  உடனடியாக அக்கபக்கத்தினர் பைசானை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பைசானின் பெற்றோர் தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் ஆட்பாட்டம் செய்வோம் எனவும் புகார் அளித்தனர்.

  • ss

இதையடுத்து பைசானை தாக்கிய தினேஷ்குமார், கணேஷ்குமார், மோகன்குமார், அகஸ்தியன் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் 506(2), 307, 294 b, 274 உள்ளிட்ட 5 பிரிவுகளிகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடட்ப்ஹ்தி வருகின்றனர். நாகையில் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதற்காக இளைஞர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், #beef4life, #WeLoveBeef, #BeefForLife ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன