‘மாட்டிக்கிட்டாப்ள, புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்’: சிவகார்த்திகேயன் பட இயக்குநர் ட்வீட் 

 

‘மாட்டிக்கிட்டாப்ள, புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்’: சிவகார்த்திகேயன் பட இயக்குநர் ட்வீட் 

விஷால், அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் இரும்புத்திரை.

விஷால், அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் இரும்புத்திரை. இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தையடுத்து அவர் சிவகார்த்திகேயன் வைத்து ஹீரோ என்ற படத்தை இயக்கி வருகிறார். 

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் பி.எஸ்.மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘Breaking News: ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் நாட்டை விட்டு வெளியேற பார்க்கிறார். புடிச்சிட்டேன். சிவகார்த்திகேயன் அண்ணே, மாட்டிக்கிட்டாப்ல. புடிச்சு ஜெயில்ல போடுங்க சார். ‘ஹீரோ’ ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். 

அதற்குப்  பதிலளித்த சிவகார்த்திகேயன், ‘அப்படி சொல்லிட்டு நீங்களும் எஸ்கேப் ஆகுறிங்க போலயே மிஸ்டர் மித்ரன்’ என்று நகைச்சுவையாகக் கலாய்த்து உள்ளார்.