மாடு திருட்டுப்போவதை தடுக்க மாட்டின் வயிற்றுக்குள் பொருத்தப்படும் ஜிபிஎஸ்! 

 

மாடு திருட்டுப்போவதை தடுக்க மாட்டின் வயிற்றுக்குள் பொருத்தப்படும் ஜிபிஎஸ்! 

மடகாஸ்கர் நாட்டில் மாடுகள் திருடப்படுவதை தடுப்பதற்காக மாட்டின் வயிற்றுக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுகிறது. 

மடகாஸ்கர் நாட்டில் மாடுகள் திருடப்படுவதை தடுப்பதற்காக மாட்டின் வயிற்றுக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுகிறது. 

செபு எனும் திமிலுடன் கூடிய நாட்டு மாடுகளுக்கு பெயர் போனது மடகாஸ்கர். அப்பகுதியில் அடிக்கடி மாடுகள் திருடப்படுவது தொடர்கதையாகியிருந்தது. இதனால் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட உருளையான சாதனம் ஒன்று மாட்டின் வயிற்றுப்பகுதிக்குள் செலுத்தப்படும் திட்டத்தை அந்நாட்டு அதிபர் ஆண்டிரி ரஜோலினா அறிமுகப்படுத்தினார். 

மாடுகளின் வாய்வழியாக வயிற்றுக்குள் செலுத்தப்படும் இந்த ஜிபிஎஸ் சாதனம், மாடுகள் எங்கே செல்கின்றன. எவ்வளவு தூரத்தில் உள்ள என்பதை துல்லியமான சிக்னல் மூலம் காட்டும். இதனால் மாடுகளை திருடி சென்றாலும் கூட எளிதாக கண்டுபிடிக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஜிபிஎஸ் சாதனத்தால் மாட்டுக்கு எந்த தீங்கும் நேரிடாது எனவும், மாட்டின் சராசரி ஆயுட்காலமான 7 ஆண்டுகள் வரை வயிற்றினுள்ளிருந்து செயல்படும் இந்த சாதனம் மாடு உயிரிழந்த பின்னர் தானாகவே செயலிழக்கும் என்றும் கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்நாட்டில் மாடுவைத்திருக்கும் அனைவருக்கும் ஜிபிஎஸ் கருவியை அரசு இலவசமாக வழங்கிவருகிறது.