மாடுபிடி வீரர்களைத் திணற வைத்த அமைச்சர் விஜயபாஸ்கரின் சின்ன கொம்பன்’ காளை !

 

மாடுபிடி வீரர்களைத் திணற வைத்த அமைச்சர் விஜயபாஸ்கரின்  சின்ன கொம்பன்’ காளை !

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் வளர்த்து வந்த ‘கொம்பன்’ என்னும் காலை ஜல்லிக்கட்டு களத்திலேயே வாடி வாசலில் மோதி வீர மரணம் அடைந்தது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் வளர்த்து வந்த ‘கொம்பன்’ என்னும் காலை ஜல்லிக்கட்டு களத்திலேயே வாடி வாசலில் மோதி வீர மரணம் அடைந்தது. அந்த காளையை இது வரை யாராலும் அடக்க முடிந்ததில்லை. அதன் இறப்பிற்குப் பிறகு சோகத்தில் மூழ்கிய அமைச்சர் அதன் நினைவாக ‘சின்ன கொம்பன்’ என்னும் காளையை வளர்த்தார்.

ttn

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்தில் வளர்க்கப்பட்டு வரும் இந்த காளையை, ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைக்க விஜயபாஸ்கர் தீவிர பயிற்சி அளித்து வந்தார். அவரது தோட்டத்திலேயே மண்ணை முட்டி சிதறடித்தல் உள்ளிட்ட பயிற்சிகளைத் தானே, சின்ன கொம்பன் காளைக்கு அளித்தார். 

ttn

இதனையடுத்து அந்த ‘சின்ன கொம்பன்’ காளை புதுக்கோட்டை மாவட்டம் கீழத்தானியம் என்னும் பகுதியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டது. அந்த போட்டியில் மொத்தமாக 650 காளைகளும், அதனை அடக்க 300 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர். அப்பகுதியில் மாவயல் காட்டு அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த போட்டியில் சில காளைகள் வீரர்களிடம் சிக்கியது. போட்டியின் இறுதி வரை அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘சின்ன கொம்பன்’ காளை உள்ளிட்ட 3 காளைகள் வீரர்களிடம் சிக்காமல் வீரர்களை திணற வைத்தன.