மாடுகளை அடுத்து சாமி சிலைகளுக்கு ஸ்வெட்டர்! உ.பி. அரசு அதிரடி!!

மாடுகளை அடுத்து சாமி சிலைகளுக்கு ஸ்வெட்டர்! உ.பி. அரசு அதிரடி!!

வட மாநிலங்களில் குளிர் வாட்டிவதைத்து வரும் நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோவில்களில் சாமி சிலைகளுக்கு கம்பளி உடைகள் அணிவிக்கப்பட்டுள்ளது. 

வட மாநிலங்களில் குளிர் வாட்டிவதைத்து வரும் நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோவில்களில் சாமி சிலைகளுக்கு கம்பளி உடைகள் அணிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களைப் போலவே சாமி சிலைகளுக்கும் குளிரும் என்பதால் கடுங்குளிரை சமாளிக்கும் விதமாக அனைத்து சிலைகளுக்கும் ஸ்வெட்டர் அணிவித்துள்ளது அந்நாட்டு அரசு. வாரணாசியில் உள்ள படா கணேஷ் கோவிலில் உள்ள அனைத்து சாமி சிலைகளுக்கும் கம்பளியாலான ஸ்வெட்டர் அணிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சிவலிங்கங்களும் கம்பளி சால்வையால் மூடப்பட்டுள்ளன.

god statue

இதேபோல் அயோத்தி, ராம் ஜன்மபூமியில் உள்ள ராம் லல்லா ஒரு போர்வையால் மூடப்பட்டிருக்கிறார். சிலை திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளதால், காற்றைச் சூடாக வைத்திருக்க அவருக்கு ஹீட் புளோயரும் (Heat Blower) வைக்கப்பட்டுள்ளது.