மஹா ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்! 

 

மஹா ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்! 

மஹா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ஹன்சிகாவுக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை: மஹா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ஹன்சிகாவுக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் படம், 50-வது படம் ‘மஹா’.நாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்து வருகிறார்.இப்படத்தின் புதுப்புது போஸ்டர்களை அவ்வப்போது வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பிவருகிறது.சென்னையில் நடைபெற்றுவரும் இப்படத்தின் படப்பிடிப்பில்,தற்போது ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்கப்படுகின்றன. 

maha

இதில் ஹன்சிகா தரையில் குட்டிக் கரணம் அடிக்க வேண்டும். ஒரு சிறு கால இடைவெளியில் அது தவறாக அமைந்து, ஹன்சிகா கையிலும் கால் முட்டியிலும் காயம் ஏற்பட்டது. விரைவான முதல் உதவி மற்றும் குழுவின் ஆதரவு ஹன்சிகாவை அந்த சம்பவத்தில் இருந்து மிக விரைவில் மீட்டது. திரும்ப திரும்ப சொல்லப்பட்ட ஆலோசனைக்குப் பின்னரும் கூட, ஹன்சிகா எந்தவொரு கஷ்டமும் இன்றி அந்த காட்சியில் நடித்துமுடித்துள்ளார். அதைத்தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்த மாதம் பாண்டிச்சேரி செல்ல உள்ளார்களாம் அது மட்டுமின்றி ஒரு சில காட்சிகளை வெளிநாட்டில் எடுக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளன.