மஹா புயல் நாளை மறுநாள் கரையை கடக்கும்!

 

மஹா புயல் நாளை மறுநாள் கரையை கடக்கும்!

மஹா புயல் கரையை கடக்கும் போது, 100 முதல் 110 கிமீ வேகத்தில் பலத்த கற்று வீசும்.

மஹா புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

குஜராத் மாநிலம் வேரவாலிலிருந்து மேற்கு தென்மேற்கே நேற்று மாலை 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது  மஹா புயல். இதையடுத்து மஹா புயல் கிலோ மீட்டர் வேகத்தில்  நகர்ந்து நாளை திசைமாறி குஜராத் நோக்கி திரும்புகிறது. . தீவிர புயலாக  மாறி பின்பு வலுகுறையும் இந்த புயல், டையு மற்றும் துவாரகா இடையே நாளை மறுநாள் இரவு கரையை கடக்கவுள்ளது. 

maha

மஹா புயல் கரையை கடக்கும் போது, 100 முதல் 110 கிமீ வேகத்தில் பலத்த கற்று வீசும். அதேபோல் கொங்கன்  மற்றும்  வட மத்திய மகாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. 

rain

அதே சமயம்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.