மஹா பரணி: மஹா பரணி தர்ப்பணம் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

மஹா பரணி: மஹா பரணி தர்ப்பணம் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மஹாளய பட்சத்தில் வருகின்ற பரணி நட்சத்திர நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் என்னற்ற பலன்களை நாம் பெறமுடியும் என்று பல்வேறு ஜோதிட நூல்கள் கூறுகின்றன. 

மஹா பரணியில் தர்ப்பணம் செய்தால் கயாவில் தர்ப்பணம் செய்த புண்ணியத்தினை பெறலாம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.மஹா பரணி நாளான இன்று பித்ரு வழிபாடு செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும்.மேலும் சிறப்பு பூஜைகள்,பிதுர் தர்ப்பணம், திலக்ஹோமம்,மோட்ச தீபம் ஏற்றி முன்னோர்களை வழிபாடு செய்வது சகல நண்மைகளையும் வழங்கும் என்று பல்வேறு ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.

maha 1

மகாளய பட்சத்தில் பரணி நட்சத்திரம் தோன்றும் நாள் மகா பரணி என்றழைக்கப்படுகிறது .இந்த பரணி நட்சத்திரம் யம தர்மராஜன் ஆட்சி செய்யும் நட்சத்திரம்.எனவே இந்த நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது.

மகாளய பட்சமான 15 தினங்களும் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் இந்நாளில் தர்ப்பணம் செய்வதால்,கயாவில் தர்ப்பணம் செய்த புண்ணியத்தினை அடைவர் என்று நூல்கள் உரைக்கின்றன.முன்னோர் வழிபாட்டை மிகவும் சிறப்பாக கூறும் நமது இந்து மதம்,மறுபிறப்பு கொள்கையை ஆதாரமாக கொண்டுள்ளது.

ஹிந்து சமயப்படி பகவானிடம் பக்தி ஒவ்வொரு மனிதனுக்கு எவ்வுளவு தேவையோ அதைவிட குறைவில்லாமல் தேவதைகளையும்,பித்ருக்களையும் திருப்தி செய்விக்கும் கர்மாக்களை செய்ய வேண்டும் என்று அறநூல்கள் கூறுகின்றன. 

maha 2

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் மூன்று கடன்கள் உள்ளதாக அறநால்கள் கூறுகின்றன.தேவைதகளுக்க செய்ய வேண்டிய கடமைகளான ஹோமங்கள்,அதுபோல் ரிஷிகளுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள் அதுபோல் விஸ்வே தேவர்கள் என்று கருதப்படும் நம்முடைய முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணம்.

எந்த பிறவியை அடைந்திருந்தாலும் அந்தந்த பிறவியிலேயே,நிலையிலேயே அவர்களுக்கு வேண்டிய சுகங்களை,ஆஹாராதிகளை விச்வே தேவர்கள்தாம் நாம் செய்த தர்ப்பணம், சிரார்த்தம் முதலிய பயனை அவர்களுக்கு அளிக்கிறார்கள். 

maha 3

மஹாளய பட்சம் என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை ஜீவராசிகளுக்கும்,

நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.அகவே அந்த மஹாளய பட்ச காலத்தில் அவசியம் பித்ரு தேவதைகளுக்க தர்ப்பணம்,ஹிரண்ய சிரார்த்தம், அன்ன சிரார்த்தம் இம் மூன்றில்  எதையேனும் ஒன்றை விடாமல் செய்ய வேண்டும்.