மவுசு குறையாத ராயல் என்பீல்டு….. ஒரே மாதத்தில் 63,536 புல்லட்கள் காலி…..

 

மவுசு குறையாத ராயல் என்பீல்டு….. ஒரே மாதத்தில் 63,536 புல்லட்கள் காலி…..

கடந்த மாதம் 63,536 புல்லட்களை விற்பனை செய்துள்ளதாக ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரு சக்கர வாகன தயாரிப்பு பிரிவு ராயல் என்பீல்டு. ராயல் என்பீல்டு நிறுவனம் சென்ற மாதத்தில் மொத்தம் 63,536 புல்லட்களை விற்பனை செய்துள்ளது. இது 2019 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 1 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் ராயல் என்பீல்டு மொத்தம் 62,630 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.

எய்ஷர் மோட்டார்ஸ்

ராயல் என்பீல்டு, கடந்த பிப்ரவரியில் உள்நாட்டில் மட்டும் 61,188 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2019 பிப்ரவரி மாத விற்பனையை காட்டிலும் 2 சதவீதம் அதிகமாகும். உள்நாட்டில் விற்பனை அதிகரித்து இருப்பது ராயல் என்பீல்டு புல்லட்களுக்கென தனி ரசிகர் கூட்டமே இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. 2019 பிப்ரவரியில் உள்நாட்டில் 60,066 புல்லட்களை மட்டுமே ராயல் என்பீல்டு விற்பனை செய்து இருந்தது.

ராயல் என்பீல்டு புல்லட்

உள்நாட்டில் விற்பனை அதிகரித்துள்ள போதிலும், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதி சிறிது குறைந்துள்ளது. சென்ற மாதத்தில் ராயல் என்பீல்டு மொத்தம் 2,348 வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்து இருந்தது. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில்  2,564 வாகனங்களை ராயல் என்பீல்டு ஏற்றுமதி செய்தது.