“மழை வரும்னா வெய்யிலடிக்குது ,ஸ்கூல் லீவு விட்டா மழை நிக்குது” இதை சொல்லப்பெரிய படிப்பு வேணுமாம் -தனியார் வானிலையுடன் மோதும் இந்திய வானிலை .

“மழை வரும்னா வெய்யிலடிக்குது ,ஸ்கூல் லீவு விட்டா மழை நிக்குது” இதை சொல்லப்பெரிய படிப்பு வேணுமாம் -தனியார் வானிலையுடன் மோதும் இந்திய வானிலை .

இந்திய வானிலை மையத்தின் இணையதளத்தை தனியார் வானிலை அறிவிப்பாளர்கள் பார்க்க முடியாத படி சில கட்டுப்பாடுகளை அது கொண்டுவந்துள்ளது. ஏனென்றால் அந்த இணையதளத்திலிருந்து தனியார் அறிவிப்பாளர்கள் தகவல்களை திருடி வானிலை அறிவிப்பு கொடுத்து மக்களை குழப்பி விடுகிறார்களாம் .

rmd-delhi

மேலும் வானிலை சம்பந்தமான எந்த படிப்பும் படிக்காமல் வானிலை அறிவிப்பு சொல்கிறார்களாம் .
இதனால் வானிலை ஆய்வு மையம் சார்பில் உலக நாடுகளின் தரவுகள், செயற்கை கோள் தரவுகள், ரேடார் தரவுகள் முக்கிய செயற்கைகோள் போட்டோக்கள், கடல் மற்றும் நிலா வெப்பநிலை குறித்த வரைபடங்கள் போன்ற இன்னும் பல் தரவுகளை துறை அலுவலர்கள் தவிர்த்து மற்றவர்கள் பார்க்க முடியாத படி கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன .

weatherman

மேலும் வானிலை மையம் சார்பில் ட்விட்டர், முகநூல் பக்கங்களில் தகவல்களை உடனுக்குடன் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என வானிலை அதிகாரி ஒருவர் கூறினார் .

weather-report--01

இதை கேள்விப்பட்ட தனியார் வானிலை அறிவிப்பாளர் வெதர் மேன் இனிமேல், நான் ஐஎம்டி வழங்கிய எந்த படங்களையும் பயன்படுத்தமாட்டேன், நான் அவர்களைச் சார்ந்து இல்லை எனவும், ஐஎம்டி வழங்கிய தரவுகள் இல்லாமல் என்னால் தகவல்களை வழங்க முடியும் மேலும் வானிலை சம்பந்தமான தரவுக்காக  நான் சொந்தமாக கட்டண சந்தா கட்டியுள்ளேன் என்று கூறினார் .