மழைவேண்டி தவளைகளுக்கு திருமணம்! கர்நாடக கொடுமை!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் கிராமத்தினர் ஒன்று திரண்டு மழை வேண்டி இரண்டு தவளைகளுக்கு திருமணம் முடித்து வைத்துள்ளனர். ஒரு ஜோடி தவளைகளைப் பிடித்து வந்து அவற்றுக்கென தைக்கப்பட்ட உடையை அணிவித்து, மாலையிட்டு, மணமக்கள் போல அலங்கரித்தனர். பின்னர் தவளையின் சார்பில் பெண் ஒருவர் மற்றொரு தவளைக்கு தாலிகட்ட தவளைகளுக்கு திருமணம் நடந்தது. அதன்பின் மழை வந்ததா என்ற சந்தேகமா உங்களுக்கு? கண்ணாடிய திருப்புனா எப்புடி ஜீவா???

எத்தை தின்றால் பித்தம் தெளியும் கணக்காக, மழை பெய்யிறதுக்கு என்ன வேணும்னாலும் பண்ண தயாராக இருக்கிறார்கள் மக்கள். பழைய பாரதிராஜா படத்துல கன்னிபெண்ணின் கையில் கொள்ளிக்கட்டையை குடுத்து துணிய புடுங்கிட்டு ஊரைச் சுத்தி வரசொல்ற மாதிரி நிஜத்துலயும் சீக்கிரமே நடக்கத்தான் போகுது பாருங்க. நம்ம ஊர்ல இந்த ஐயமாருங்க தண்ணித்தொட்டிக்குள்ள உட்கார்ந்து மந்திரம் ஓதுனா மழை வந்திடும்னு, கழுத்தளவு தண்ணியில நின்னுகிட்டு நாதஸ்வரம் வாசிச்சா மழை வந்திடும்னு சாத்வீகமா ஏதேதோ செஞ்சுகிட்டு இருக்காங்க. சரி, அவங்க நம்பிக்கை செஞ்டுட்டுப்போகட்டும்னு விட்டா, கர்நாடகாவுல வேற எக்ஸ்ட்ரீம் போய்ட்டானுங்க.

Prayers for Rain