மழையின் குறுக்கீட்டால் பாதியில் நின்ற ஆட்டம்… வலுவான நிலையில் இந்தியா!

 

மழையின் குறுக்கீட்டால் பாதியில் நின்ற ஆட்டம்… வலுவான நிலையில் இந்தியா!

மூன்றாவது டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் தேநீர் இடைவேளைக்குப் பிறகு மழை குறுக்கிட்டதால் நிறுத்தப்பட்டது. 3 விக்கெட்டுகளை இழந்த பிறகும் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.

மூன்றாவது டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் தேநீர் இடைவேளைக்குப் பிறகு மழை குறுக்கிட்டதால் நிறுத்தப்பட்டது. 3 விக்கெட்டுகளை இழந்த பிறகும் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இதுவரை இல்லாத அளவிற்கு 5 மாற்றங்களுடன் களம் கண்டது.

india

உணவு இடைவேளைக்கு முன்பு, தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரபாடா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் திணறினர். அகர்வால் (10), புஜாரா (0) இருவரும் ரபாடாவின் பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். அடுத்துவந்த கேப்டன் கோலி (12) நார்ஜெ பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேற, 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

இருப்பினும் அடுத்து வந்த துணை கேப்டன் ரஹானே, உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் இருக்க நிலைத்து ஆடினார். உணவு இடைவேளைக்கு பின்பு இந்திய அணியின் பேட்டிங்கில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. ரஹானே மற்றும் ரோஹித் இருவரும் பவுண்டரிகளை விளாச தொடங்கினர். இதில் ரோகித் சர்மா அரைசதம் கண்டவுடன் சிக்சர் மழையாக பொழிந்து இத் தொடரின் மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் இவருக்கு பக்கபலமாக இருந்த ரகானே அரைசதம் கடந்தார்.

rohit

தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்து இருந்தது. அதன் பிறகு சிறிது நேரம் ஆட்டம் நடைபெற்றது. பின்பு மழை குறுக்கிட்டதால் உடனடியாக ஆட்டம் நிறுத்தப்பட்டு வீரர்கள் பெவிலியனுக்கு திரும்பினர். மாலை 4.30 மணி வரை மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் இன்றைய ஆட்டம் அதுவரை வீசப்பட்ட 58 ஓவர்களோடு முடித்துக் கொள்ளப்பட்டது. முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை இந்திய அணி அடித்திருந்தது.

4வது விக்கெட்டுக்கு ரோகித்-ரஹானே ஜோடி 185 ரன்கள் சேர்த்தது.

-vicky