மழையால் சரிந்த சுற்றுச்சுவர், புதைந்துப்போன 15 உயிர்கள் – புனே பரிதாபம்

 

மழையால் சரிந்த சுற்றுச்சுவர், புதைந்துப்போன 15 உயிர்கள் – புனே பரிதாபம்

பலியானவர்களில் இரண்டு குழந்தைகளும் அடக்கம். அருகில் நடக்கும் கட்டிட வேலைக்காக கொட்டகை அமைத்து இந்த தொழிலாளர்கள் சுற்றுச்சுவரையொட்டி தங்கியிருந்தனர். சுற்றுச்சுவர் தரமற்றதாக கட்டப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

புனே, கோந்துவாவில் இருக்கும் அரசு குடியிருப்பு வளாக சுற்றுச்சுவர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்து விழுந்ததில், சுற்றுச்சுவரின் மற்றொரு பக்கம் குடிசையில் வசித்துவந்த கட்டிட தொழிலாளர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் இரண்டு குழந்தைகளும் அடக்கம். அருகில் நடக்கும் கட்டிட வேலைக்காக கொட்டகை அமைத்து இந்த தொழிலாளர்கள் சுற்றுச்சுவரையொட்டி தங்கியிருந்தனர். சுற்றுச்சுவர் தரமற்றதாக கட்டப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Wall collapse

நள்ளிரவில் நடந்த விபத்தை நேரில் வந்து பார்வையிட்ட கலெக்டர் நவல் கிஷோர், 15 பேர் பலியானது சிறிய விஷயம் அல்ல, இதுகுறித்து முறையான விரிவான விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். புனேயில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 73 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு புனேவில் பெய்த மிக கனமழை அளவு இது. முன்னாடி போனால் இடிக்கிது, பின்னாடி வந்தால் உதைக்குது இந்த மழை!