மழைக் கல்யாணம்! இன்னொரு கேரள ஸ்பெஷல் ஐட்டம்! வாழ்றானுங்கய்யா சேட்டனுங்க!

 

மழைக் கல்யாணம்! இன்னொரு கேரள ஸ்பெஷல் ஐட்டம்! வாழ்றானுங்கய்யா சேட்டனுங்க!

இதுவே சென்னையாக இருந்தால்? மழைமேகம் திரண்டுவருவதைக் கண்டு, இளையராஜா பாட்டு, சூடான பஜ்ஜி என தயாராகும்போதுதான், அது மழைமேகம் இல்லை, கார்ப்பரேஷன் குப்பைதொட்டியில் யாரோ குப்பையை கொளுத்தியதால் கிளம்பும் புகை என்பது தெரியவரும்போது இருக்கும்பாருங்க அந்த வேதனை!!!

தென்மேற்கு பருவக்காற்று வேகமெடுக்கும் ஜூன், ஜூலை மாதங்களில், அதுவும் தென்மேற்கு பருவம் துவங்கும் கேரளாவில் இந்த சீசனில் யாராவது திருமணம் போன்ற முக்கியமான சுபகாரியங்களுக்கு அழைப்பு விடுப்பார்களா? விடுக்கிறார்கள். மழை கல்யாணம்னா என்ன? மழை வேணும்னு மனுசனுக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைக்கிறதா என பிற்போக்காக யோசிக்க வேணாம். ரொமான்ட்டிக்கா, செம ஃபீலோட ஒரு ஆணும் பெண்ணும் இல்லற வாழ்க்கையில் மழையை சாட்சியாக வைத்து மழை பெய்யும்போது திருமணம் செய்துகொள்வது.

Monsoon Wedding

என்னாது, மழையில நனைஞ்சுகிட்டே கல்யாணமா? என்னாப்பா இது புதுசா இருக்கே? ஆம். மழை திருமணங்கள் கேரளாவில் ட்ரெண்ட் ஆகிவருகின்றன. மழைக்காலத்தில் திருமணத்தை நடத்தி வைப்பதற்கென்றே திருமண ஏற்பாட்டு நிறுவனங்கள் ஸ்பெஷல் டூட்டி எல்லாம் பார்க்க துவங்கி இருக்கின்றன. கடந்த வாரம் மும்பையில் இருந்து ஒரு ஜோடி வந்து தங்கள் திருமணத்தை கொட்டும் மழையில், குடைபிடித்தபிடி நடத்தி சென்றிருக்கின்றனர்.

Monsoon Wedding

மழையில நின்னா, நனைந்துபோக மாட்டார்களா என்றால், கான்செப்டே அதுதான் என கண்ணடிக்கின்றனர். “பொத்துகிட்டு ஊத்துதடி வானம்” போன்ற பல கஜகஜா பாடல்களின்போது பேக்ரவுன்டில் மழை பொழியும் பார்த்திருக்கிறீர்கள்தானே? அதுவே, நிஜத்தில் நடக்கவேண்டும் என்றால், எப்போது மழை வருமோ அப்போதுவரை காத்திருக்க வேண்டும். ஆனால், கேரளாவில்தான் அந்தப் பிரச்னையே இல்லையே. கேரளாவில் எப்ப மழை வரும்? கேரளாவில்தான் எப்பவுமே மழை வருமே!

Monsoon Wedding

இதுவே சென்னையாக இருந்தால்? மழைமேகம் திரண்டுவருவதைக் கண்டு, இளையராஜா பாட்டு, சூடான பஜ்ஜி என தயாராகும்போதுதான், அது மழைமேகம் இல்லை, கார்ப்பரேஷன் குப்பைதொட்டியில் யாரோ குப்பையை கொளுத்தினதால கெளம்புன பொகைன்னு தெரியவரும்போது இருக்கும்பாருங்க வேதனை, அந்த வேதனை!!!