மழைக்காலத்துக்கு இதமான ‘பிரட் பஜ்ஜி’… இது,வேற லெவல்…

 

மழைக்காலத்துக்கு இதமான ‘பிரட் பஜ்ஜி’… இது,வேற லெவல்…

மழைக்காலங்கள் ஆரம்பமாகின்ற நேரம். பள்ளி விட்டு மாலையில் வரும் குழந்தைகளுக்கு என்ன சாப்பிடக் கொடுப்பது என்று தினம் தினம் யோசிப்பவர்களுக்கான கலர்ஃபுல் ஸ்நாக்ஸ் ரொட்டி பஜ்ஜி.கடையில் நாலு பஜ்ஜி வாங்கிக் கொடுத்தால் போச்சு, இத்தனை வேலைப் பார்க்கணுமா? என்று புலம்புபவர்கள்…

மழைக்காலங்கள் ஆரம்பமாகின்ற நேரம். பள்ளி விட்டு மாலையில் வரும் குழந்தைகளுக்கு என்ன சாப்பிடக் கொடுப்பது என்று தினம் தினம் யோசிப்பவர்களுக்கான கலர்ஃபுல் ஸ்நாக்ஸ் ரொட்டி பஜ்ஜி.கடையில் நாலு பஜ்ஜி வாங்கிக் கொடுத்தால் போச்சு, இத்தனை வேலைப் பார்க்கணுமா? என்று புலம்புபவர்கள்… அப்படியே அடுத்த மெனுவிற்கு தாவி விடுங்கள்.. கடைகளில் ஒரு நாள் பஜ்ஜி போடுவதற்குப் பயன்படுத்தும் எண்ணெய்யை தொடர்ந்து பத்து நாட்கள் வரை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். தவிர, கண்களை ஈர்க்கும் கலர்களும் மொறுமொறுவிற்கு ரசாயனங்களும் சேர்க்கப்பட்டிருக்கும். 

bread baji

வீட்டிற்கு பிரெட் பாக்கெட் வாங்கும் போது, நான்கைந்து முறை காலாவதி தேதியைச் சரிபார்த்து வாங்கும் நாம் தான், பஜ்ஜி கடைகளில் கேள்வியே கேட்காமல் வாங்கிச் சாப்பிடுகிறோம். பெரும்பாலான பஜ்ஜி கடைகளில், பயன்படுத்தும் ப்ரெட் வகைகள் எல்லாமே காலாவதியான பாக்கெட்கள் தான்.
 
ரொட்டி ( பிரெட்) பஜ்ஜி
 
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 400கி
உளுத்தம் பருப்பு – 100கி
உப்பு –  தேவைக்கேற்ப
வற்றல் – 4
பெருங்காயம்-சிறிதளவு
பஜ்ஜிப் பவுடர் – 1 சிட்டிகை
பொறித்தெடுக்க எண்ணெய்
சோடாஉப்பு – 1 சிட்டிகை
 

bread baji

செய்முறை
அரிசியையும், பருப்பையும் நன்றாக கழுவிய பின்னர்  தனித்தனியாக ஊற வைக்கவும். இரண்டும் அரைமணிநேரம் ஊறியப் பிறகு பருப்பை இட்லிக்கு ஆட்டுவது போல நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அரிசியை அரைக்கும் போது வற்றல், பெருங்காயம், உப்பு ,சோடா உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பஜ்ஜிப் பொடியையும், உளுந்து மாவையும் சேர்த்து நன்றாக கலக்கவும். மாவு அதிகம் கெட்டியாக இல்லாமல் இருக்கவேண்டும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பின் ரொட்டியை மாவில் தோய்த்து எண்ணெய் காய்ந்ததும் பொறித்து எடுக்கலாம். இதே போல் வாழைக்காய், குடை மிளகாய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பெரியவெங்காயம், அப்பளம் என உங்களுக்கு தேவையானவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.