மழைக்காலங்களில் கை கொடுக்கும் அவசிய குறிப்புகள்! 

 

மழைக்காலங்களில் கை கொடுக்கும் அவசிய குறிப்புகள்! 

தமிழகம் முழுவதுமே பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழைக் காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரின் மூலமாக அதிகளவில் கிருமிகள் பரவி துவங்குகின்றன. கைகண்ட மருந்தாக சில சித்த வைத்திய மூலிகைகளைப் பற்றியும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் தெரிந்து வெச்சுக்கோங்க… அவசரத்துக்கு பயன்படும். நோய் வருவதற்கு முன்பே கூட இதனை சரியான முறையில் பயன்படுத்தி வந்தால் வருமுன் காக்கலாம்!

தமிழகம் முழுவதுமே பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழைக் காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரின் மூலமாக அதிகளவில் கிருமிகள் பரவி துவங்குகின்றன. கைகண்ட மருந்தாக சில சித்த வைத்திய மூலிகைகளைப் பற்றியும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் தெரிந்து வெச்சுக்கோங்க… அவசரத்துக்கு பயன்படும். நோய் வருவதற்கு முன்பே கூட இதனை சரியான முறையில் பயன்படுத்தி வந்தால் வருமுன் காக்கலாம்!

food

மழைக்காலங்களில் சிறந்த உணவு
மதிய உணவின்போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து  சாப்பிடுவது நல்லது. மழைக்காலங்களில் எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு தண்ணீர் சத்து அதிகமுள்ள  காய்கறிகள் ஒத்துக்கொள்ளாது. நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழைக்காலங்களில்  உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
பொரியல் செய்யும் போது அவற்றில் மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்து சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் பச்சைப்பயறு, கேழ்வரகு, கீரை  ஆகியவற்றைச் சேர்க்கக் கூடாது. மழைக்காலங்களில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரை  துகள்களை போட்டு வைக்கலாம். கீரைகளை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும்.  பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய்  போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்கூடாது. ஆனால் மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.
உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அசைவ உணவான மீன், முட்டை, கறி, சிக்கன்  போன்றவற்றை பிரஷ்ஷாக சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக்கூடாது. சூடாக சாப்பிட வேண்டும். பஜ்ஜி,  போண்டா அதிகம் சாப்பிடாமல், உப்பு உருண்டை, இட்லி சாம்பார், பிரட் ரோஸ்ட் என சாப்பிடலாம். மேலும் தினமும் சாப்பிடும் உணவையே சற்று  சூடாகச் சாப்பிட்டால் போதும்.

food

உணவுகளை பாதுகாக்க
சில உணவுப் பொருட்களில் பூஞ்சைகள் பரவும் பருவம் மழைக்காலம். இதனைத் தவிர்க்க சாப்பிடக் கூடிய அளவிற்கு மட்டுமே சமைப்பது நல்லது. பருப்பு, மாவு போன்றவற்றை இறுக்கமான, காற்று புகாதபடி உள்ள பாட்டில்களில் வைக்க வேண்டும்.  பயறு வகை களை பூச்சிகள் அல்லது  புழுக்களிடமிருந்து காப்பாற்ற, அவற்றின் மீது கடுகு எண்ணெயை சிறிதளவு தெளித்து வைக்கவும். உணவு தானியங்களை புத்துணர்வுடன் வைத்திருக்க  அவற்றின் மீது சிறிதளவு ஆமணக்கு எண்ணெயையும் தெளிக்கவும். சமைத்த உணவை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கிளறி விட்டால், அதில் பாக்டீரியாக்கள் உட்காராது. சப்பாத்திகளை சில்வர் தாள்களில் சுற்றி  வைப்பதன் மூலமாக பாதுகாத்திட முடியும்.
மழைகாலங்களில் உடலில் இருக்கும் மூன்று தன்மைகளான வாதம், பித்தம், கபம் போன்றவற்றில் கபம் சார்ந்த பாதிப்புகளான சுவாச சம்பந்தமான நோய்கள், இருமல், தொண்டைப்புண் போன்றவை அதிகம் ஏற்படுகிறது இக்காலங்களில் கண்டங்கத்திரி காய்கள் கொண்டு செய்யப்பட்ட குழம்பு, கூட்டு போன்றவற்றை சாப்பிடுவதால் கபம் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
கொள்ளு ரசம்
கொள்ளு தானியத்தில் நோய் தொற்றை எதிர்த்து போராடும் சக்தி அதிகம் உள்ளது. மழைக்காலங்களில் கொள்ளு ரசம் தயாரித்து அவ்வப்போது பருகி வந்தால் ஜலதோஷம், தொண்டைக்கட்டு, இருமல் போன்றவை முற்றிலும் நீங்கும். கொள்ளு ரசத்தை குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்து வந்தால் மழைக்காலங்களில் நோய்கள் ஏற்படாதவாறு தடுக்கலாம்.  

diarhera

வயிற்றுப்போக்கு
மழைக்காலத்தில் எளிதில் தாக்கும் நோய்களில் வயிற்றுப் போக்கும் ஒன்று. சுகாதாரமில்லாத தண்ணீரைப் பயன்படுத்துவதால் ஏற்படுகிற கிருமி தொற்றுக்களினாலும், உணவினாலும் ஏற்படலாம். வயிற்றுப்போக்கு ஏற்படும் போது நம் உடலில் இருக்கும் நீராதாரம் அதிகளவு  வெளியேறும். இதன் காரணமாக உடல் சோர்வு ஏற்படும். இந்நோய் ஏற்பட்டால் காலதாமதமின்றி மருத்துவமனைக்கு சென்று  சிகிச்சை பெறுவது அவசியம். வயிற்றுப்போக்கில்  இருவகைகள் உண்டு. கடுமையான வயிற்றுப் போக்கு, தீவிரமான வயிற்றுப்போக்கு. இவை இரண்டையுமே  வரும் முன் தடுக்க முதலில் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பாக கையை நன்றாக  கழுவ வேண்டும். வெந்நீரைக் குடிப்பது நல்லது. காலரா இருந்தால், கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும்.
மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் கிருமிகள், சுத்தமில்லாத உணவுகள் மற்றும் தண்ணீரின் மூலம் வருகிறது. 
அறிகுறிகள்: சோர்வு, மஞ்சள் நிற சிறுநீர், வாந்தி மற்றும் ஈரல் செயல் பிறழ்ச்சி. இவற்றை தடுக்க கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும்.  சத்தான பானங்களை அதிகமாக குடிக்க வேண்டும்.
வைரஸ் காய்ச்சல் அனைத்து காலங்களிலும் உருவாகும். மிதமான முதல் அதிகமான காய்ச்சல் தான் இதற்கான அறிகுறி.  இக்காய்ச்சல் தொடர்ந்து 37 நாட்கள் வரை நீடிக்கும். மேலும் இதனுடன் சளியும் இருமலும் சேர்ந்து இருக்கும். நிலவேம்பு பொடியுடன் தண்ணீர்  சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் இந்நோயிலிருந்து விடுபடலாம்.