மழைகாலத்துக்கான நொறுக்குத் தீனி… ஆனியன் ரிங்ஸ்

மழைகாலத்துக்கான நொறுக்குத் தீனி… ஆனியன் ரிங்ஸ்

சமையலில் வதக்கிப் போடும் ஒன்றிரண்டு வெங்காயத் துண்டுகளையும் தேடிப் பிடித்து, ஓரம் கட்டி வைக்கும் குழந்தைகளுக்கு வெங்காயத்தைப் பயன்படுத்தி பலகாரங்களைச் செய்துக் கொடுங்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு வெங்காயத்தின் மீது இருக்கும் வெறுப்பு நீங்கி, வெங்காயத்தைச் சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக ஆனியன் ரிங்ஸ் செய்முறையைப் பார்ப்போம்.

onion rings

தேவையான பொருட்கள்
பெரியவெங்காயம் -3
தயிர் – 1கப்
மைதா – 1கப்
கார்ன் ஃப்ளோர் – 1/4 கப்
மிளகு – 1டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

onion rings

செய்முறை 
நல்ல பெரிய வெங்காயமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, வெங்காயத்தை வட்ட வில்லைகளாக பஜ்ஜிக்கு நறுக்குவதைப் போல நறுக்கிக் கொள்ளவும். பின், வெங்காய வில்லைகளில் இருந்து, தனித்தனி வளையங்களாக பிரித்துக் கொள்ளவும். தயிரில் மிளகுத்தூள் மற்றும் உப்பு கலந்து அதில் வெங்காய வளையங்களை ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஊறவிடவும். மைதா மாவு, கார்ன் ஃப்ளோர் மாவு, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் கலந்துக் கொள்ளவும். வெங்காயச் சுருளை இந்தக் கலவையில் பிரட்டி பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். இந்த ஆனியன் ரிங்ஸ்ஸை புதினா சட்னியுடன் பரிமாறினால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.