மளிகை மற்றும் காய்கறி கடைகள் இன்று பிற்பகல் 3 மணிவரை செயல்படும்!

 

மளிகை மற்றும் காய்கறி கடைகள் இன்று பிற்பகல் 3 மணிவரை செயல்படும்!

கோயம்பேடு சந்தையில் கடைகள் திறக்கப்படாது என்றும் மொத்த விற்பனை கடைகள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை, கோவை, மதுரையில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்  என்றும்  சேலம், திருப்பூரில் ஏப்ரல் 26ஆம் தேதி 29 வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதனால் அத்தியாவசிய கடைகள் எதுவும் இருக்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக வியாபாரிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.  நாளை முதல் புதன் கிழமை வரை கோயம்பேடு சந்தையில் கடைகள் திறக்கப்படாது என்றும் மொத்த விற்பனை கடைகள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதனால் சென்னையின் பல இடங்களில் மாளிகை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று அத்தியாவசிய பொருட்கள் வாங்க காத்து கிடக்கின்றனர். இருப்பினும் பல  இடங்களில் மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. 

 

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின், “பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது. நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். 

tt

இந்நிலையில்  சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மளிகை கடைகள் காய்கறி கடைகள் இன்று பிற்பகல் 3 மணிவரை செயல்படலாம் என்று  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.