மளிகைக் கடைக்கு சென்ற மகன் மணக்கோலத்தில் திரும்யிதால் தாய் அதிர்ச்சி ! மருமகளை ஏற்க முடியாது என காவல்நிலையத்தில் புகார்

மளிகைக் கடைக்கு சென்ற மகன் மணக்கோலத்தில் திரும்யிதால் தாய் அதிர்ச்சி ! மருமகளை ஏற்க முடியாது என காவல்நிலையத்தில் புகார்

உத்தரபிரதேசத்தில் மளிகைக் கடைக்கு அனுப்பிய மகன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்ததால் தாய் அதிர்ச்சி அடைந்தார். இந்த திருமணத்தை ஏற்க மாட்டேன் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் மளிகைக் கடைக்கு அனுப்பிய மகன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்ததால் தாய் அதிர்ச்சி அடைந்தார். இந்த திருமணத்தை ஏற்க மாட்டேன் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், காசியாபாத் மாவட்டம் சாகிபாபாத் காவநிலையத்திற்கு ஒரு தாய் புகார் அளிக்க வந்தார். அந்தப் புகாரில் நான் எனது மகனை மளிகை கடைக்கு அனுப்பினேன். ஆனால் அவன் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு மணக்கோலத்தில் வந்து வீட்டில் நின்றான். இதனால் நான் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த திருமணத்தை என்னால் ஏற்க முடியாது என அழுது புலம்பினார். 

gaziabad-marriage01

அந்தத் தாயால் புகார் அளிக்கப்பட்டவர் பெயர் குட்டு. வயது 26. இது குறித்து அவர் தெரிவிக்கையில், ஹரித்வாரில் உள்ள ஆர்ய சமாஜ் கோயிலில் 2 மாதத்திற்கு முன்பே சவிதாவை திருமணம் செய்து கொண்டேன். ஆனாலும் சாட்சிகள் இல்லாததால் திருமணப் பதிவு சான்றிதழ் பெற முடியவில்லை. திருமணச் சான்றிதழ் பெறலாம் என்று மீண்டும் ஹரித்வார் செல்ல முடிவு செய்தேன். ஆனால் ஊரடங்கு காரணமாக என்னால் செல்ல முடியவில்லை. 
மேலும் திருமணத்திற்கு பிறகு சவீதா டெல்லியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். ஊரடங்கு காரணமாக வீட்டை காலி செய்யுமாறு சவீதாவிடம் வீட்டின் உரிமையாளர் கூறினார். அதனால் மனைவியை அழைத்துக் கொண்டு நான் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டேன். என கூறினார். இதற்கிடையே இந்த பிரச்சனை தீரும் வரை சவீதாவை காலி செய்யுமாறு வற்புறுத்த வேண்டாம் என அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்கு போலீஸ் அறிவுறுத்தி உள்ளது.