மளிகைக்கடையில் அடி, உதை, குத்து வாங்கிய பாலா,ஷங்கர், மணிரத்னம் பட வசனகர்த்தா…

 

மளிகைக்கடையில் அடி, உதை, குத்து வாங்கிய பாலா,ஷங்கர், மணிரத்னம் பட வசனகர்த்தா…

தமிழ் இலக்கியக்கூட்டங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடந்திருக்கவேண்டிய சம்பவம் ஒன்று நேற்று நாகர்கோவில் ஜவுளிக்கடை ஒன்றில் நடந்தேறியுள்ளது

தமிழ் இலக்கியக்கூட்டங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடந்திருக்கவேண்டிய சம்பவம் ஒன்று நேற்று நாகர்கோவில் ஜவுளிக்கடை ஒன்றில் நடந்தேறியுள்ளது. கடைக்காரர்களிடம் தனது எலக்கிய அறிவைக் காட்டியதால் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் நையப் புடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசிப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன்.வயது 60. இலக்கியத்தில் சுந்தர ராமசாமியின் சிஷ்யர் என்று அறியப்பட்ட இவர் ‘ரப்பர், காடு, ஏழாம் உலகம் என்று பல நாவல்கள் எழுதியுள்ளார். பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ இவரது ஏழாம் உலகம் நாவலின் கதைதான். சினிமாவிலும் மிகத் தீவிரமாக இயங்கிவரும் ஜெயமோகன் பாலா தவிர மணிரத்னம்,ஷங்கர் படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.

jeyamohan

நேற்று இரவு அவர் தனது இல்லம் உள்ள  பார்வதிபுரத்தில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். பொருட்கள் வாங்கும்போது கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த கும்பல் அவரை அடித்து உதைத்துள்ளனர். எனவே சம்பவம் குறித்து அவர் வடசேரி போலீஸ் ஸ்டேஷனில் ஜெயமோகன் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சினிமா, இலக்கிய வட்டாரங்களில் இச்செய்தி பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

தமிழ் இலக்கிய,சினிமா வட்டாரங்களில் ஜெயமோகனுக்கு 33 சதவித ரசிகர்களும் 67 சதவிகித எதிராளிகளும் இருக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

jayamohan

முகநூலில் இன்னொரு முரண்பட்ட தகவல்…

எழுத்தாளர் ஜெயமோகன் கன்னியாகுமரியில் மளிகைகடைகாரரால் தாக்கப்பட்டார்…புளித்துப்போன மாவை கொடுத்தாக நடந்த சண்டையில் கடைக்காரால் தாக்கப்பட்டதாக வடசேரி காவல் நிலையத்தில் ஜெயமோகன் புகார்.ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

புளித்துபோன எழுத்தாளர்ன்னு கடைக்காரர் சிம்பாலிக்கா சொல்றாரோ?!