மளமளவென ஏறும் விலை! விற்பனை நினைத்து கலங்கும் தங்க நகைக்கடைகள்!

 

மளமளவென ஏறும் விலை! விற்பனை நினைத்து கலங்கும் தங்க நகைக்கடைகள்!

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருவதால் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். மேலும், இந்த ஆண்டில் விற்பனை குறையும் என்ற கணிப்புகளால் தங்க வர்த்தகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் தங்கம் அதிகம் இறக்குமதியில் சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. நம்ம மக்கள் தங்கத்தை வெறும் ஆபரணமாக மக்கள் பார்ப்பதில்லை. அதனை முதலீடாக கருதுகின்றனர். மேலும், திடீரென ஏற்படும் நிதி நெருக்கடியை தங்கத்தை வைத்து சமாளித்து விடுகின்றனர். இதனால்தான் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கின்றனர்.

தங்க செயின்

சமீபகாலமாக மக்கள் தங்கத்தை வாங்குவது குறைந்துவிட்டது போல் தெரிகிறது. 2018ம் ஆண்டில் தங்கம் விற்பனை முந்தைய ஆண்டை காட்டிலும் 1.5 சதவீதம் குறைந்து 760.4 டன்னாக குறைந்தது. இது 10 ஆண்டு விற்பனையின் சராசரி அளவான 838 டன்னை காட்டிலும் குறைவாகும். இந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து விட்டது. இதனால் இந்தியாவில் தங்க விற்பனை இந்த ஆண்டு 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறையும் என்று உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது.

உலக தங்க கவுன்சில்

சென்னையில் இன்று 1 கிராம் தங்கத்தின் (22 காரட்) விலை முந்தைய தினத்தை காட்டிலும் 56 ரூபாய் குறைந்து ரூ.3,247க்கு விற்பனையானது. ஒரு பவுன் தங்கத்தின் விலை 448 ரூபாய் குறைந்து ரூ.25,976க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.40.80க்கும், கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து ரூ.40,800க்கு விற்பனையானது.