மலை ரயில் சேவை ரத்து! நீலகிரி மாவட்டத்துக்கு யாரும் வராதீங்க!! 

 

மலை ரயில் சேவை ரத்து! நீலகிரி மாவட்டத்துக்கு யாரும் வராதீங்க!! 

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது.

பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வைராஸால் இந்தியாவில் 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் பொது இடங்களில் கூடக்கூடாது, திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை மார்ச் 31 ஆம் தேதிவரை மூடவேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஊட்டி

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாளை 18ம் தேதி முதல் 31aஅம் வரை மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்பட்டு வரும் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், போன்ற பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள் எதிர்வரும் 31ஆம் தேதி வரை மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.