மலை மீது ஏறும் குட்டி கரடியை அடித்தே ஆற்றில் தள்ளிவிட்ட ‘மனித மிருகங்கள்’ : பதற வைக்கும் வீடியோ!?

 

மலை மீது ஏறும் குட்டி கரடியை அடித்தே ஆற்றில் தள்ளிவிட்ட ‘மனித மிருகங்கள்’ : பதற வைக்கும் வீடியோ!?

மலை மீது ஏற முற்படும் கரடிக்குட்டி மனிதர்களால் தாக்கப்படும் வீடியோ  நெஞ்சைப் பதைபதைக்க வைத்துள்ளது. 

கார்கில்: மலை மீது ஏற முற்படும் கரடிக்குட்டி மனிதர்களால் தாக்கப்படும் வீடியோ  நெஞ்சைப் பதைபதைக்க வைத்துள்ளது. 

bear

ஜம்மு – காஷ்மீர் கார்கில் பகுதியில் பிரவுன் நிற கரடிக்குட்டி மலை மீது ஏற முயற்சிக்கிறது.  ஆனால்  மலைமீது இருந்த மனிதர்கள் அதைக் கல்லால் தாக்கக்  காயமடைந்த கரடிக்குட்டி, மீண்டும் தத்தி தத்தி ஏற முயல்கிறது. இருப்பினும் மிருகத்தனமாக தாக்குதலை மீண்டும் அதை நோக்கிச் செய்ய, நிலைதடுமாறிய கரடி குட்டி மலை மேலிருந்து கீழே ஆற்றில் விழுகிறது. 

 

இந்த வீடியோவை முகமது-அ-ஷா என்பவர் தனது  டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது காண்பவர் நெஞ்சைக்  கனக்கச்  செய்கிறது. இந்த வீடியோவை பகிரும் பலரும் இது போன்ற மிருகத்தனமாக நடந்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். 

இதைத் தொடர்ந்து  ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி, கரடியை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களின் செயலை மனிதத்தன்மையற்ற செயல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருவது  குறிப்பிடத்தக்கது.