மலையாள படத்தில் சன்னி லியோன்!

 

மலையாள படத்தில் சன்னி லியோன்!

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மலையாள திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

திருவனந்தபுரம்: பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மலையாள திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஆபாச படங்களை தவிர்த்து பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய ரசிகர்களுக்காக முழு நீள தமிழ் படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று சரித்திர படமாக உருவாகி வரும் ‘வீரமாதேவி’ படத்தில் நடித்து வரும் சன்னி லியோன், நடிகர் விஷாலின் ‘அயோக்யா’ படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு நடனமாடவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளார். சந்தோஷ் நாயர் என்பவர் இயக்கும் மலையாள படத்தில் தேசிய விருது நடிகர்கள் சுராஜ், சலிம்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘ரங்கீலா’ என தலைப்பிடவுள்ள இப்படம் காமெடி ஜானரில் உருவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.